நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. 200MP கேமரா, LIPO டிஸ்பிளே, AI பட்டனுடன் கம்பேக் கொடுக்கும் Xioami CIVI போன்!
ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ சிவி 6 ஸ்மார்ட்போனுக்கான திட்டங்களை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட வேகத்தில்.. "அவ்ளோ தான்! இதோடு சியோமி சிவி சீரீஸ் கதை முடிந்தது" என்று வதந்திகள் பரவியது. இருப்பினும் தற்போது கிடைத்துள்ள ஒரு சமீபத்திய தகவல் ஆனது சியோமி சிவி 6 (Xiaomi Civi 6) ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறது
ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதால், இந்நிறுவனத்தின் அடுத்த சிவி சீரீஸ் மாடலும் இங்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நம்பர் சீரீஸில் முன்னோக்கி போகாமல் ஏன் பின்னோக்கி போகிறது என்பதில் தெளிவு இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், ஷாவ்மீ நிறுவனம் கடந்த மே 2025 இல் சீனாவில் ஷாவ்மீ சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருந்தது.

ஷாவ்மீ சிவி 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி இது பிரத்யேக ஏஐ பட்டனுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பிரத்யேக ஏஐ பட்டன் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் OnePlus மற்றும் Nothing நிறுவனங்களின் பெரும்பாலான போன்கள் பிரத்யேக ஏஐ பட்டனை கொண்டுள்ளன
முன்னதாக வெளியான தகவல்கள் இது 200MP ப்ரைமரி கேமராவுடன் டெலிஃபோட்டோ லென்ஸ் (3x ஆப்டிகல் ஜூம்) மற்றும் 50MP செல்ஃபி கேமராவை பேக் செய்யலாம் என்கிறது,. இது 6.59-இன்ச் LIPO குவாட்-கர்வ்டு டிஸ்பிளே, டூயல் ஸ்பீக்கர்கள், ஒரு மெட்டல் பிரேம் மற்றும் ஒரு கிளாஸ் பேக் ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Elite சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.55 இன்ச் 1.5கே கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது
இந்த சிப்செட் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்பனில் வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை (Vapour Cooling System) விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ப்போன் ஆனது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 ப்ரைமரி கேமரா உள்ளது
இதனுடன் 2 எக்ஸ் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12 மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டரும்உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் இதுவொரு தரமான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை, இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது வெளியாகும் 8000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இது சிறிய பேட்டரி ஆக தெரியலாம். இருப்பினும் ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.


Click it and Unblock the Notifications








