Home
Mobile

7மிமீ ஸ்லிம் டிசைன், 67W பாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50MP டெலிஃபோட்டோ கேமரா.. Xiaomi-யின் புது போன்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் பல வகையான சைனீஸ் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ளது. அதாவது இவைகள் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். அப்படி ஒரு சீரீஸ் ஆகத்தான் ஷாவ்மீ சிவி ஸ்மார்ட்போன்கள் இருந்தன. ஆனால் ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் அந்த போக்கை மாற்றி வைத்தது.

அதன் பிறகு ஷாவ்மீ சிவி சீரிஸ்-ன் கீழ் எந்தவொரு புதிய ஸ்மார்ட்போன் வந்தாலும் அதை இந்தியர்களும் உற்றுநோக்க தொடங்கினர். ஏனென்றால் அது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த 2024 டிசம்பர் மாதத்திலிருந்து ஷாவ்மீ சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) குறித்த விவரங்கள் உற்றுநோக்கப்படுகிறது. இது விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த வார்த்தையும் இல்லை.

7மிமீ ஸ்லிம் டிசைன், 67W பாஸ்ட் சார்ஜிங்.. Xiaomi-யின் புது போன்!

ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- இது சுமார் 7மிமி தடிமன் கொண்ட ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனாக இருக்கலாம்
- 6000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமை வழங்கும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை வைத்திருக்கக்கூடும்
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4) இயக்கப்படலாம்
- 67W பாஸ்ட் சார்ஜிங்

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இபோது சம்மிலக்ஸ் லென்ஸுடன் இணைந்து லைகாவால் வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.

ஷாவ்மீ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, சில பழைய ஷாவ்மீ ஸ்மார்ட்போன் மாடல்கள் அப்டேட் சுழற்சியின் முடிவுக்கு வந்துள்ளன. அதாவது குறிப்பிட்ட சில ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இனிமேல் ஆண்ட்ராய்டு (Android) அப்டேட்கள் கிடைக்காது; அவைகளில் உள்ள ஹைப்பர் ஓஎஸ் வெர்ஷன்களுக்கு (HyperOS Versions) அப்டேட் கிடைக்காது என்று அர்த்தம்.

கூடவே செக்யூரிட்டி பேட்ச்களும் (Security Patches) கிடைக்காது. அப்படியாக ஏப்ரல் 2025 (April 2025) நிலவரப்படி, 6 ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அனைத்து வகையான சாஃப்ட்வேர் ஆதரவையும் இழக்க உள்ளன. அந்த 6 ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

01. ஷாவ்மீ 11ஐ (Xiaomi 11i)
02. ஷாவ்மீ 11 ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 11i HyperCharge)
03. ரெட்மி கே50 கேமிங் எடிஷன் (Redmi K50 Gaming Edition)
04. ரெட்மி நோட் 11எஸ் (Redmi Note 11S)
05. ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 11 Pro Plus 5G)
06. ரெட்மி நோட் 10ஏ (Redmi Note 10A)

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 5 Pro with 67W Fast Charging 7mm Slim Design May Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X