Home
Mobile

இனி சம்பவம் உறுதி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 50MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?

சியோமி பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த சியோமி சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) போனானது மே மாதம் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மே 27ஆம் தேதி வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதி செய்யும் விதமாக சியோமி நிறுவனம் அந்த போனின் பீச்சர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. டிசைன், கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சியோமி நிறுவனத்தின் நியூ ஸ்டார்டிங் பாய்ன்ட் (New Starting Point) இவென்ட் மே 22ஆம் தேதி நடக்கிறது. சீனாவில் நடக்கும் இந்த இவென்ட்டில் சியோமி 15எஸ் ப்ரோ (Xiaomi 15S Pro), சியோமி பேட் 7 அல்ட்ரா (Xiaomi Pad 7 Ultra) மற்றும் சியோமி ஒய்யூ7 (Xiaomi YU7) ஆகிய மாடல்கள் மற்றும் சியோமி எக்ஸ்ரிங் 01 எஸ்ஓசி (Xiaomi XRING 01 SoC) வெளியாக இருக்கிறது.

இதே தேதி அல்லது மே 27ஆம் தேதி சியோமி சிவி 5 ப்ரோ மாடலானது வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சியோமி நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், அந்த போன் கட்டாயம் மே மாதம் வெளியாகும் என்பதை நம்பலாம்.

சியோமி சிவி 5 ப்ரோ அம்சங்கள் (Xiaomi CIVI 5 Pro Specifications): இந்த சியோமி போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.5 இன்ச் குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad Curved OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் எச்பிஎம் சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) கிடைக்க இருக்கிறது.

இனி சம்பவம் உறுதி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி!

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. லெய்கா சம்மிலக்ஸ் (Leica Summilux Lens) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஆகவே, ஓம்னிவிஷன் லைட் ஹண்டர் (Omnivision Light Hunter) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இதேபோல ஓம்னிவிஷன் சென்சாருடன் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மேலும், சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரானது சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் வருகிறது. இந்த சியோமி சிவி 5 ப்ரோ போனில் 6000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது.

டிசைனை பார்க்கையில், மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் சர்க்கிள் கேமரா பம்ப் கிடைக்கிறது. நெபுளா பர்ப்பிள், சகுரா பிங்க் மற்றும் ஒயிட் & பிளாக் கலர்களில் கிடைக்க இருக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (On-display Fingerprint) பீச்சர்கள் வருகின்றன.

இனி சம்பவம் உறுதி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி!

16 ரேம் மற்றும் 12 ரேம் வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களில் டிசைன், கேமரா, பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இந்த சியோமி சிவி 5 ப்ரோ போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

FAQs
இந்தியாவில் சியோமி சிவி 5 ப்ரோ கிடைக்குமா?

சியோமி நிறுவனம் சிவி மாடல்களை இந்திய மார்கெட்டிலும் அறிமுகம் செய்துவருகிறது. முன்னதாக சியோமி சிவி 4 மாடலானது இந்திய மார்கெட்டில் வெளியானது. இப்போது, ரூ.30,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, சியோமி சிவி 5 ப்ரோ இங்கு எதிர்பார்க்கலாம். மே மாதம் சீனாவில் வெளியான பிறகு, இந்தியா மற்றும் குளோபல் வெளியீடு குறித்த விவரங்கள் தெரிய வரும்.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi CIVI 5 Pro With 50MP Camera 12GB RAM To Launch in China Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X