Home
Mobile

2025-ஐ குத்தகைக்கு எடுத்த Xiaomi.. 4 இறக்கியாச்சு.. இன்னும் 2 வருது.. ஆல் இந்தியன்ஸ்.. ரெடியா இருங்க!

ஷாவ்மீ நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல! 2025 ஆம் ஆண்டு தொடங்கியதும், வரிசையாக புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இந்தியாவில், இம்மாத தொடக்கத்தில் தான் ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. மேலும் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரெட்மி ஏ4 5ஜி அறிமுகமாகி, விற்பனையில் சக்கைபோடு போட்டுகொண்டு இருக்கிறது.

2025-ஐ குத்தகைக்கு எடுத்த Xiaomi.. ஆல் இந்தியன்ஸ்.. ரெடியா இருங்க!

மிகவும் சமீபத்தில் தான், ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) ஸ்மார்ட்போனை அப்கிரேடட் வெர்ஷன் ஆக ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் சீனவில் அறிமுகமாகும், பின்னர் அது இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் போக்கோ எப்7 (Poco F7) என்கிற மாடலாக அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கிடையில் தற்போது, ஷாவ்மீ சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஷாவ்மீ சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. ஷாவ்மீ நிறுவனம் அதன் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது.

ஆனால் ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தின் மூலம் அந்த வழக்கம் உடைக்கப்பட்டது. ஷாவ்மீ 14 சிவி மாடலானது ஷாவ்மீ சிவி 4 ப்ரோ மாடலின் ரீபிரான்டட் வெர்ஷனாகும். ஆக ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஷாவ்மீ 14 சிவி என்கிற பெயரில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்? இது SM8735 சிப்செட் உடன், அதாவது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்டை (Snapdragon 8s Elite SoC) பேக் செய்யலாம். இந்த சிப்செட் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஷாவ்மீ சிவி 5 ப்ரோவின் அறிமுகமும் அதையொட்டி இருக்கலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பழைய மாடலுடன் ஒப்பிடும் போது சிறிய 1.5கே குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இதன் டிஸ்பிளேவில் டூயல் ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டுகளுடன் டூயல் செல்பீ கேமரா சென்சார்கள் இடம்பெறலாம்.

ரியர் கேமராவை பொறுத்தவரை, பேக் பேனலின் மேல் இடது மூலையில் வட்ட வடிவிலான கேமரா மாட்யூலை பெறும். அதில் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபைபர் கிளாஸ் பேக் பேனல் மற்றும் மெட்டல் சைட் ஃபிரேமுடன் வரவும் அதிக வாய்ப்புள்ளது. கடைசியாக இது 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.35,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது ஸ்னாப்டிராகன் 8ஸ் எலைட் சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி டர்போ 4 அல்லது போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (MediaTek Dimensity 8400) சிப்செட்டுடன் வர வாய்ப்புள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, இது அதன் முன்னோடியை போலவே ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். பின்பக்கத்தில் செங்குத்தாக டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 5 Pro Major Features Price Launch Timeline Tipped May Launch in India as Xiaomi 15 Civi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X