Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 6000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. புது சியோமி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் சியோமி சிவி 5 ப்ரோ (xiaomi civi 5 pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சியோமி போன் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது சியோமி சிவி 5 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி சிவி 5 ப்ரோ அம்சங்கள் (xiaomi civi 5 pro Specifications): 6.55-இன்ச் 1.5கே சி8 12-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K C8 12-bit OLED display) வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. புது சியோமி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது. மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

50எம்பி Light Fusion 800 மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுககும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும் 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

சியோமி ஹைப்பர் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 5ஜி, டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.

6000mAh பேட்டரி உடன் சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,795)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,380 விலையிலும், 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியணட் ரூ.42,960 விலையிலும் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
xiaomi civi 5 pro launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X