Home
Mobile

காத்திருப்பு ஓவர்.. 50எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. 6000mAh பேட்டரி.. வருகிறது Xiaomi போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் விரைவில் சியோமி சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மே 22-ம் தேதி இந்த போன் சீனாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதேபோல் இந்த போன் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. மேலும் பிளாக், பர்பிள், ஒயிட் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

காத்திருப்பு ஓவர்.. வருகிறது Xiaomi போன்.. எந்த மாடல்?

சியோமி சிவி 5 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Civi 5 Pro Specifications): பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் (punch hole cutout) கூடிய 1.5கே டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உடன் சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

6000mAh பேட்டரி உடன் சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராகள் இந்த சியோமி போனில் உள்ளன. அதில் டெலிபோட்டோ கேமராவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா வசதி கொண்டுள்ளது இந்த போன். பின்பு ஐபி69 ரேட்டிங், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக சியோமி சிவி 5 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 5 Pro launch timeline leaked online: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X