Home
Mobile

இந்தியாவுக்கு வரும் சியோமி சிவி.. 50எம்பி கேமரா.. 512GB மெமரி.. OLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்..

கடந்த வாரம் சீனாவில் சியோமி சிவி 4 ப்ரோ (Xiaomi Civi 4 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சியோமி போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சியோமி சிவி 4 ப்ரோ போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சியோமி சிவி 4 (Xiaomi Civi 4) எனும் பெயரில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் அறிமுகம் குறித்த தகவலை முதலில் Gizmochina தளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் சியோமி சிவி.. 50எம்பி கேமரா.. 512GB மெமரி..

குறிப்பாக சியோமி சிவி 4 போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி சிவி 4 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Civi 4 Pro specifications): 6.55-இன்ச் 1.கே ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் டிஸ்பிளேவில் 1,236x2,750 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்தியாவுக்கு வரும் சியோமி சிவி.. 50எம்பி கேமரா.. 512GB மெமரி..

தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு HyperOS மூலம் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் இயங்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி சிவி 4 ப்ரோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்தியாவுக்கு வரும் சியோமி சிவி.. 50எம்பி கேமரா.. 512GB மெமரி..

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4600எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த சியோமி சிவி 4 ப்ரோ போனில் உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 4 Pro will be launched in India soon: check specifications and more details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X