Home
Mobile

பில்-ஷேப்ட் டிஸ்பிளே பாத்திருக்கீங்களா? பட்டையை கிளப்பும் டிசைனில் Xiaomi Civi 3

சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் சியோமி சிவி 3 ( Xiaomi Civi 3) போன் மே 25ஆம் தேதி அறிமுகமாகிறது. தரமான கேமரா, பிராசஸர், டிஸ்பிளேனு ஆல்-ரவுண்டர் போனாக மிட்-ரேன்ஞ் விலையில் களமிறங்க உள்ளது. இந்த போனின் அம்சங்கள், விலை குறித்த விவரங்கள் இதோ.

சியோமி நிறுவனத்தின் சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் சியோமி சிவி 3 போனின் வெளியீட்டு தேதியை குறிப்பிட்டு டீசர் வெளியாகி இருக்கிறது. ஸ்லிம் டிசைனில் டூயல்-டோன் கலர்களில் மாஸ் காட்டுகிறது. இந்த சியோமி சிவி 3 போன், ஐபோன் 14 புரோவுக்கு (iPhone 14 Pro) நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தாலே அறிந்துகொள்ள முடிகிறது.

புதுவிதமான டிசைனில் Xiaomi Civi 3.. பில்-ஷேப்ட் டிஸ்பிளே தெரியுமா?

குறிப்பாக, இந்த சியோமி சிவி 3 போனின் பில் - ஷேப்ட் டிஸ்பிளே (Pill - shaped display) கண்களை கவரும் விதமாக இருக்கிறது. அதேபோல, செல்பீ கேமராவில் கொடுக்கப்பட்டிருக்கும் அல்ட்ரா வைட் லென்ஸ் (Ultra-wide lens) 100 டிகிரி பீல்ட்டை கவர் செய்யும் வகையில் இருக்கிறது. இந்த போனின் மற்ற அம்சங்கள், விலை எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு.

சியோமி சிவி 3 அம்சங்கள் (Xiaomi Civi 3 Specifications): இந்த போனின் அம்சங்களை சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், சில தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில், சியோமி சிவி 3 போன் 6.55 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பில்-ஷேப்ட் டிசைனில் இருக்கிறது.

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரெட்டெக்ஷன் (Corning Gorilla Glass 5) கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு 13 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்ட்ரா சிப்செட் ( Dimensity 8200-Ultra chipset) கொண்டுள்ளது.

12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 4,500mAh பேட்டரி இருக்கிறது. மெயின் கேமரா டிரிபிள் லேயர் செட்டப் உடன் 50 எம்பி வைட், 20 எம்பி அல்ட்ரா வைட், 2 எம்பி மேக்ரோ உடன் இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா அல்ட்ரா வைட் லென்சுடன் வருகிறது. ரோஸ் பர்பிள் (Rose Purple), மின்ட் கிரீன் (Mint Green), செரண்டிபிட்டி கோல்டு (Serendipity Gold), கோகோனட் கிரே (Coconut Grey) ஆகிய நான்கு கலர்களில் வருகிறது.

வரும் மே 25ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது. அதன்பின் சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் மிட்-ரேன்ஞ் ரகத்தில் வெளியாகும் என்பதால், ரூ.35,000 நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 3 Launch Set for May 25 with front-facing cameras a 100-degree field of view
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X