Home
Mobile

லிஸ்ட்டில் இருக்கும் Xiaomi, Redmi: சைலண்டாக களமிறங்கும் சிவி!

Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது அடுத்த மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது China Compulsory Certification 3C இணையதளத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என்பது இந்த பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இது 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முழுத் தகவலை விரிவாக பார்க்கலாம்.

நுழைவு நிலை 5ஜி ஸ்மார்ட்போன்

நுழைவு நிலை 5ஜி ஸ்மார்ட்போன்

Xiaomi Civi 2 ஆனது நுழைவு நிலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது 3சி சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. மறுபுறம் Redmi 11A ஸ்மார்ட்போனானது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த பட்டியல் குறிப்பிடுகிறது. Xiaomi Civi 2 ஸ்மார்ட்போனானது 3C தளத்தில் மாடல் எண் 2209129SC உடன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ

சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ

Nashvillechatter அறிக்கையின்படி, 2209129SC மற்றும் 22095RA98C ஆகிய எண்களுடன் இரண்டு சியோமி மாடல்கள் 3சி சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சியோமி சிவி 2 மற்றும் ரெட்மி 11ஏ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Xiaomi Civi 2 ஆனது சார்ஜர் மாடல் எண் MDY-12-EF-ஐக் கொண்டுள்ளது, இதன்மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல் Redmi 11A ஸ்மார்ட்போனானது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. 3சி பட்டியலில் இரண்டு போன்களும் 5ஜி இணைப்பு ஆதரவுகளை பெறும் என தொகுக்கப்பட்டுள்ளது.

Qualcomm Snapdragon 7 Gen 1 SoC சிப்செட்

Qualcomm Snapdragon 7 Gen 1 SoC சிப்செட்

Xiaomi Civi ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வாரிசாக Xiaomi Civi 2 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம் என முன்னதாக தகவல் வெளியானது. இந்த புதிய மாடலானது Qualcomm Snapdragon 7 Gen 1 SoC மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் டிப்ஸ்டர் தகவலின்படி, Xiaomi Civi 2 ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான மைக்ரோ-வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி விஷன் தொழில்நுட்பம்

டால்பி விஷன் தொழில்நுட்பம்

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது டால்பி விஷன் தொழில்நுட்பம் மற்றும் குறுகிய பெசல்களுடன் வரும் என கூறப்படுகிறது.

மறுபுறம் பட்டியலில் உள்ள Redmi 11A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வரும் காலங்களில் ஆன்லைனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

முன்னதாக வெளியான Xiaomi Civi ஸ்மார்ட்போனானது சீன சந்தையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 2,599 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு சுமார் ரூ. 29,600 ஆகும்.

6.55 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே

6.55 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே

Xiaomi Civi ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 6.55 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது MIUI 12.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Xiaomi Civi ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா உடன் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4,500mAh பேட்டரி உடன் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

ப்ளாக், ப்ளூ, பிங்க் என்ற மூன்று வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பிங்கர் ஃப்ரிண்ட் கைரேகை ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக Xiaomi Civi 2 வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 2, Redmi 11A Listed on 3C Certification Website: Specs Details.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X