4கே டிவி மாதிரி இருக்குமாம்: விரைவில் வரும் சியோமி சிசி11 ப்ரோ இப்படியும் இருக்கலாம்- டுவிஸ்ட் இருக்கு!

|

சியோமி நிறுவனத்தின் சாதனத்துக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதன்படி சியோமி விரைவில் புதிய சாதனத்தை வெளியிட தயாராகி வருகிறது. இது தற்போது டீனா பட்டியலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் எண் ஆனது 2109119B எனவும் இது சியோமி சிசி11 ப்ரோ உடன் இணைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

6.55 இன்ச் டிஸ்ப்ளே வசதி

6.55 இன்ச் டிஸ்ப்ளே வசதி

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனமானது 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்றால் இதன் தீர்மானம் மற்றும் விகிதம் 4கே தொலைக்காட்சிக்கு இணையாக இருக்கும்.

4400 எம்ஏஎச் பேட்டரி

4400 எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகளோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதோடு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் க்ளாகிட் எக்டோ கோர் சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரெட், ஆரஞ்ச், மஞ்சள், க்ரீன், ப்ளூ, ஊதா, பிளாக், வைட் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, இரட்டை 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறந்த அதீத புகைப்பட பதிவு அனுபவத்தை இது வழங்கும். இது 5எக்ஸ் டெலிஃபோட்டோவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் காட்சிக்கு கீழ் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. சியோமி சிசி 11 கடந்த மாதம் டென்னா மூலமாக தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மாடல்கள் இடையே சில மாறுபாடுகள் இருக்கின்றன. சியோமி சிசி11 மற்றும் சியோமி சிசி11 ப்ரோ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ

சியோமி 11 லைட் 5ஜி என்இ

சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதாவது இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.28,999-ஆக உள்ளது. மேலும் அக்டோபர் 2-ம் தேதி இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மி.காம், அமேசான் வலைத்தளங்களில் இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi CC11 Pro Might Be Launching With 4K Display: Listed by TENAA

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X