சாம்சங், ஆப்பிளால் கூட முடியாத உலக சாதனையை படைத்துள்ளது சியோமி Black Shark.!

|

இன்னும் ஒரு வாரத்திற்குள், இந்த ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்புக்குள்ளான பல முக்கிய ஸ்மார்ட்போன்கள் நமது கண்களுக்கு விருந்தளிக்க போகிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது தன்னுள் பல ஆச்சரியங்கள் வைத்திருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளால் கூட முடியாத உலக சாதனையை படைத்துள்ளது சியோமி Black Shark.!

அந்த பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையை கொண்டுள்ள சியோமி நிறுவனத்திற்கும் ஒரு பெரிய இடமுண்டு.!

மிக அற்புதமான ஸ்மார்ட்போன்.!

மிக அற்புதமான ஸ்மார்ட்போன்.!

நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (எம்டபுள்யூசி) 2018-ல் வெளியாகப்போகும் சியோமி ஸ்மார்ட்போன் எது என்பதில் உறுதியான நிலைப்பாடு இல்லையெனினும், அது நிறுவனத்தின் மிக அற்புதமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்குமென்பதை சமீபத்தில் வெளியான அன்டுடு பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.

பிளாக் ஷார்க்.!

பிளாக் ஷார்க்.!

அறியாதோர்களுக்கு அன்டுடு என்பது சீன தொலைபேசிகள் மற்றும் சாதனங்களுக்கான மென்பொருளை தரப்படுத்தமொறு கருவியாகும். சமீபத்தில் இந்த பட்டியலில் 'பிளாக் ஷார்க்' என்ற குறியீட்டு பெயரைக் கொண்ட ஒரு மர்மமான ஸ்மார்ட்போன் காணபட்டுள்ளது.

சிறப்பான பகுதி என்னவென்றால்.?

சிறப்பான பகுதி என்னவென்றால்.?

இந்த சாதனம் ஒரு சியோமி தயாரிப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இக்கருவி மொபைல் கேமிங்கில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. எல்லாவற்றை விடவும் சிறப்பான பகுதி என்னவென்றால் இந்த பிளாக் ஷார்க் ஆனது அன்டுடு தரப்படுத்தல் பட்டியலில் மொத்தம் 2,70,680 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை.!

எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை.!

இந்த அளவிலானவொரு மதிப்பெண்ணை இதுவரை எந்த ஸ்மார்ட்போனும் பெற்றதில்லை. இது தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த மதிப்பீடாகும். அம்சஙகளை பொறுத்தமட்டில் இக்கருவி, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடன் 8 ஜிபி ரேம் கொண்டி இயங்கும்.

காட்சி விகிதம்

காட்சி விகிதம்

ஆனால் உள்ளடக்க சேமிப்புத்திறன் ஆனது சராசரியான அளவில் அதாவது 32 ஜிபி உள்ளது. ஒரு அட்ரெனோ 630 ஜிபியூ சிப்செட் கொண்டுள்ள பிளாக் ஷார்க் ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், 2160 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 18: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் கொண்டுள்ளது.

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி

இந்த கசிவு உண்மையாக வாய்ப்பு இருந்தால், சியோமி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மி 7 ஆனது, ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி ஒரு புதிய கேமிங் ஸ்மார்ட்போனாகவும் பார்க்க முடியும். விபோ தளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிரபல ரேஸர் நிறுவனத்தின் கருவிக்கு பதிலடி கொடுக்கும் ஒரு செயாலாகுமென்று குறிப்பிடுகிறது. ஆக மொத்தம் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போன் சந்தையை தாக்கவுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ்

சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ்

பிளாக்ஷார்க் எனக்கூறப்படும் இக்கருவியானது சியோமி மி 7 அல்லது மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்போது வரை, எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi ‘BlackShark’ smartphone leaked, is it the Mi 7.? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X