Home
Mobile

10ஜிபி ரேம் மற்றும் 20எம்பி கேம் வசதி உடன் சியோமி பிளாக் ஷார்க் அறிமுகம்: விலை?

இந்த சாதனத்தில் 2.8ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் மற்றும்; யுனசநழெ 630 புPரு வசதி இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது சியோமி நிறுவனம், தற்சமயம் அந்நிறுவனம் பிளாக் ஷார்க் ஹீலோ என்ற பெயரில் 10ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம்
செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஜிபி ரேம் & 20எம்பி கேம் வசதி  உடன் சியோமி பிளாக் ஷார்க் அறிமுகம்.!

பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக பல்வேறு வீடியோ கேம்களுக்கு என்று உருவாக்கப்பட்டவை தான் இந்த சாதனம். மேலும் இந்த சாதனத்தில் உள்ள சிபியு 12 டிகிரி வரை வெப்பநிலை குறைக்க உதவுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் வசதிகளில் கூட இந்த சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

பிளாக் ஷார்க் ஹீலோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.01-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இந்த சாதனத்தில் 2.8ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் மற்றும்; Adreno 630 GPU வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
10ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி +20எம்பி டூயல் ரியர் கேமரா( f/1.75 aperture + f/1.75 aperture) இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி செல்பீ கேமரா (f/2.2 aperture) மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு விரைவு சார்ஜ் 3.0 ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடைப் பொறுத்தவரை 190-கிராம் என்று கூறப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இந்திய விலை மதிப்பில்....
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி பிளாக் ஷார்க் விலை ரூ.33,000
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி பிளாக் ஷார்க் விலை ரூ.37,000
10ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி பிளாக் ஷார்க் விலை ரூ.44,000

Best Mobiles in India

English summary
Xiaomi Black Shark Helo Gaming Phone with up to 10GB of RAM announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X