Subscribe to Gizbot

அறிமுகம்: 4000mAh; 8ஜிபி ரேம் கொண்ட முரட்டுத்தனமான சியோமி பிளாக் ஷார்க்.!

Written By:

சியோமியின் புதிய கிளை நிறுவனமான பிளாக் ஷார்க் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் முதல் கேமிங் ஸ்மார்ட்போனை கேம் பேட் உடன் அறிமுகம் செய்துள்ளது. பிளாக் ஷார்க் கேமிங் போன் என்றழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சியோமி நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம்: 4000mAh; 8ஜிபி ரேம் கொண்ட சியோமி பிளாக் ஷார்க்.!

வெளியாகியுள்ள பிளாக் ஷார்க் கேமிங் போன் ஸ்மார்ட்போனின் ஹை எண்ட் அம்சங்கள் மற்றும் முரட்டுத்தனமான வடிவமைப்பு வருங்கால கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.!

சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.!

அம்சங்களை பொறுத்தவரை, பிளாக் ஷார்க் கேமிங் போன் ஆனது பெரும்பாலான கேமர்ஸ் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான பயனர்களையும் ஈர்க்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் சாம்பல் மற்றும் கறுப்பு வண்ணங்களின் கலவையில் உருவான ஒரு சன்டயல் போன்ற சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டர்போ பெர்பார்மன்ஸ் மோட்.!

டர்போ பெர்பார்மன்ஸ் மோட்.!

உடன் மிக தீவிரமான (கிராபிக்ஸ்) கேம்களை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் வெப்பநிலை கீழ் இஇறக்க உதவும் கூலிங் குடெக்னலாஜியையும் கொண்டுள்ளது. மேலும் உடனடியாக ஒரு அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்க உதவும் டர்போ பெர்பார்மன்ஸ் மோட், சைலன்ட் அல்லது நோட்டிபிகேஷன்களை டூ நாட் டிஸ்டர்ப் முறையின் கீழ் மாற்ற உதவும் கைரேகை சென்சார் கெஸ்டர்கள் (சைகைகள்) ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம்.!

சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம்.!

இந்த ஸ்மார்ட்போனின் கேமிங் வலிமையை மேம்படுத்துவது இதன் கேம்பேட் தான். ப்ளூடூத், Nintendo ஸ்விட்ச் போன்ற கூடுதல் பிஸிக்கல் கன்ட்ரோல் விருப்பங்கள் கொண்டுள்ள இந்த கேம்பேட் ஆனது ஒரு 150mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றத, இது சிங்கிள் சார்ஜில் சுமார் 30 மணிநேரம் வரை உபயோகப்படுத்தப்படுகிறது. பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போனின் intelligent motion compensation technology and dark scene detailing process, மென்மையான விளையாட்டு அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி.!

6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி.!

இதர அம்சங்களை பொறுத்தவரை, பிளாக் ஷார்க் கேமிங் போன் ஆனது ஒரு 5.99 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே, 18: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம், 2160 × 1080 பிக்ஸல்கள் தீர்மானம்,550 நைட் வரையிலான பிரைட்னஸ், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 உடனான அட்ரெனோ 630 ஜிபியூ, 6ஜிபி/ 8ஜிபி ரேம் உடனான 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு, இரண்டு 12 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள், எல்இடி ப்ளாஷ் கொண்ட 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

4000mAh பேட்டரி.!

4000mAh பேட்டரி.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும் பிளாக் ஷார்க் கேமிங் போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், பீடோவ், யூஎஸ்பி டைப் -சி, இரட்டை சிம் அட்டை ஆதரவு மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது. பிளாக் ஷார்க் கேமிங் போன் ஆனது ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

How to check PF Balance in online (TAMIL)
6 ஜிபி ரேம் மாடல் விலை.?

6 ஜிபி ரேம் மாடல் விலை.?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் ஆனது 2,999 யுவான் (சுமார் 31,300) என்கிற புள்ளியையும், மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் மாடல் ஆனது 3,499 யுவான் (தோராயமாக ரூ. 36,500) என்கிற புள்ளியையும் எட்டியுள்ளது. சீனாவில் முன்பதிவுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஷிப்பிங் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தொடங்கும்.

இந்திய விற்பனை.?

இந்திய விற்பனை.?

பிளாக் ஷார்க் கேமிங் போன் ஆனது போலார் நைட் பிளாக் மற்றும் ஸ்கை கிரே ஆகியஇரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முதல் 50,000 வாடிக்கையாளர்கள் ஷார்ப் கேம்பேட் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் தொடங்கப்படுமா என்பது பற்றிய விவரங்கள் இப்போது வரை தெரியவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi Black Shark Gaming Phone with Shark Gamepad launched: Price, specifications. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot