மிரட்டும் வடிவமைப்பில் சியோமி பிளாக் ஷார்க்; கூகுள் பிக்சலுக்கு நேரடி போட்டி.!

இது கேம் பிரியர்களை இலக்காக இருக்கும் என்றும் டீஸர் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அதன் இரண்டாவது முதன்மை ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் மிக தீவீரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதனை நிரூபிக்கும் வண்ணம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய பிராண்ட் ஆன பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மிரட்டும் வடிவமைப்பில் சியோமி பிளாக் ஷார்க்; கூகுள் பிக்சலுக்கு போட்டி

வெளியீட்டு தேதி மட்டுமின்றி சியோமி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான டீஸர் படம் ஒன்றின் வழியாக, கூறப்படும் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த விவரங்களையும் அறிய முடிகிறது.

வெளியான டீஸரில், ஒரு நபரின் முகத்தை பாதியாக பிளவுபடுத்தி, மீதமுள்ள பாதி பகுதியை பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் பின்பக்கம் நிரப்புவது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது கேம் பிரியர்களை இலக்காக இருக்கும் என்றும் டீஸர் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வடிவமைப்பை பொறுத்தவரை, ரேஸர் கேமிங் ஸ்மார்ட்போனில் இருப்பது போன்ற பிளாக்கிங் முனைகள் இல்லாமல், சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் வளைவான முனைகளை காண முடிகிறது. உடன் சிறியதொரு பவர் பட்டனையும் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காணமுடிகிறது. இந்த வடிவமைப்பு, முதல் தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்களை நினைவூட்டுகிறது. ஆனால் ஒப்பீட்டில், சியோமி பிளாக் ஷார்க் ஆனது இன்னும் அதிகமான விளிம்புகளை கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

மிரட்டும் வடிவமைப்பில் சியோமி பிளாக் ஷார்க்; கூகுள் பிக்சலுக்கு போட்டி

இந்த டீஸரில் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் 18: 9 என்கிற திரை விகிதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் வெளியான ரேசர் ஸ்மார்ட்போனின் திரை விகிதத்தை விட (16: 9) பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. சக்திவாய்ந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெப்பிரஷ் ரேட் டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

இருப்பினும், இது ஸியோமியின் மியூஐ கொண்டு இயங்குமா அல்லது வேறு யூசர் இன்டர்பேஸ் கொண்டு இயங்குமா என்பதில் தெளிவில்லை. இது ஏப்ரல் 13 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் வெளிவிடப்படும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Black Shark Gaming Phone Teaser Reveals Curved Corners. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X