Home
Mobile

இந்தியா: விரைவில் - சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது.

சியோமி நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதேசமயம்
அதிகளவு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

கேமிங் பேட்

கேமிங் பேட்

சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன்

பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன்

நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்

ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது.

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0

இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குயல்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விலை

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விலை

சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Black Shark 2 to launch in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X