இந்தியா: விரைவில் புதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை?
சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தகவல்களைப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்
குறிப்பாக ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்க மிக அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய
பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0
இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்
- 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

இந்திய விலைமதிப்பு
12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,950-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,945-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications