12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.! விலை என்ன தெரியுமா?
சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமர் ரசிகர்களுக்காக சியோமி நிறுவனம் கடந்த ஆண்டில் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சியோமி பிளாக் ஷார்க் 2 மாடலை இன்று அறிமுகம் செய்கிறது.

கேமிங் பேட்
சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன்
நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது.

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0
இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:
- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குயல்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விலை
சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications