8ஜிபி ரேம் + 256ஜிபி; மலிவு விலை; புதிய பிராண்ட்; மிரட்டும் சியோமி.!

சூப்பர் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான சியோமி நிறுவனம், கேமிங் ஸ்மார்ட்போன் மீதான அதன் திவீரத்தை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

|

சூப்பர் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான சியோமி நிறுவனம், கேமிங் ஸ்மார்ட்போன் மீதான அதன் திவீரத்தை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

8ஜிபி ரேம் + 256ஜிபி; மலிவு விலை; புதிய பிராண்ட்; மிரட்டும் சியோமி.!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, கடந்த வாரம், இன்டெல் கோர் ஐ7 செயலி மற்றும் NVIDIA GTX 1060 GPU உடன் இணைக்கப்பட்ட அதன் முதல் கேமிங் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து இப்போது, ஸ்மார்ட்போன் கேமர்களை குறிவைத்து ஒரு கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராக உள்ளது.

பிளாக் ஷார்க்.!

பிளாக் ஷார்க்.!

வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி, சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன்பே 'பிளாக் ஷார்க்' என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட ஒரு சியோமி கேமிங் ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல் வெளியாகி இருந்ததும், அது பார்ப்பதற்கு அப்படியே ரேஸர் ஸ்மார்ட்போன் போன்றே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய சந்தை

உலகளாவிய சந்தை

வெளியாகியுள்ள அழைப்பிதழில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் ஷார்க் என்கிற பிராண்ட் பெயரை கொண்டுருக்கும். சியோமியின் மி பிராண்டிங் இடம்பெறாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. இதை செய்வதால் சீன வர்த்தகம் என்கிற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற உலகளாவிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

256ஜிபி

256ஜிபி

மேலும் வெளியான அழைப்பிதழில், ஒரு பிளாக் ஷார்க் லோகோ மற்றும் க்வால்காம் பிராண்டிங் ஆகியவைகளையும் காண முடிகிறது. அது சமீபத்திய ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட்டை உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் உடனான 64ஜிபி அல்லது 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமான ரெப்ரெஷ், மென்மையான கேமிங்

வேகமான ரெப்ரெஷ், மென்மையான கேமிங்

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்கும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன், இது எப்படி வேறுபடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் (குறிப்பாக இதன் 120Hz என்கிற டிஸ்பிளே) வேகமான ரெப்ரெஷ், மென்மையான கேமிங் ஆகியவற்றை உறுதி செய்யும்.

மலிவானதாக இருக்கும்

மலிவானதாக இருக்கும்

வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் ஆனது சில குறிப்பிட்ட விஷயங்களை உறுதிப்பட செய்யும். முதலாவதாக, முற்றிலும் புதிய வன்பொருள் அம்சங்களை கொண்டுவரும், இரண்டாவதாக, ரேஸர் போன் உள்ளிட்ட மற்ற கேமிங் ஸ்மார்ட்போன்களைவிட மலிவானதாக இருக்கும். எனவே நீங்கள் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தால் கொஞ்சம் பொறுங்கள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi-backed Black Shark to launch gamer-centric smartphone on April 13. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X