ரூ.12,999/-க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு.!

புதிய நிறம் தவிர, எஞ்சியிருக்கும் அம்சங்கள் எல்லாமே ஏற்கனவே இருக்கும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை ஒத்திருக்கின்றன.

|

சீன நிறுவனமான சியோமி, நேற்று அதன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பு மாறுபாடு ஒன்றை இந்தியாவில் அறிவித்தது. அதுவொரு லேக் ப்ளூ ரெட்மி நோட் 4 பாதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புதிறனில் மட்டுமே கிடைக்கும். இந்த புதிய பதிப்பானது நிறுவனத்தின் 'வேக் தி லேக்' பிரச்சாரத்தின் புதிய திட்டத்தை நினைவுகூரும் முன்முயற்சியாகும்.

ரூ.12,999/-க்கு ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு.!

ரூ.12,999/- என்ற விலைமதிப்பு கொண்டுள்ள ரெட்மி நோட் 4 சாதனத்தின் ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் ஒரு பகுதியை ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை ஆதரிக்கும் முயற்சிகள் நோக்கி செல்லும். புதிய நிறம் தவிர, எஞ்சியிருக்கும் அம்சங்கள் எல்லாமே ஏற்கனவே இருக்கும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை ஒத்திருக்கின்றன.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Announces Redmi Note 4 Lake Blue Edition With 4GB RAM and 64GB Internal Storage at Rs. 12,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X