உலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன்! எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா?

|

கடந்த ஆண்டு, சியோமி மற்றும் மீட்டு நிறுவனம் தங்களின் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டது. மீட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் டொமைன் பெயர்களைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய உரிமத்தையும் சியோமி பெற்றிருந்தது.

உலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன்!

அதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மீட்டு பிராண்டின் கீழ் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தையும் சியோமி பெற்றிருந்தது.

சியோமி வெளியிட்ட போஸ்டர்

சியோமி வெளியிட்ட போஸ்டர்

தற்பொழுது சியோமி நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரின் படி சியோமி மற்றும் மீட்டு நிறுவனங்கள் இரண்டும் இணைந்து உருவாக்கி உள்ள முதல் ஸ்மார்ட்போன் இது என்று ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் 6Z போனிற்க்கு போட்டியாக மீட்டு

அசுஸ் 6Z போனிற்க்கு போட்டியாக மீட்டு

சியோமி வெளியிட்டுள்ள அந்த விளம்பரத்தில் மீட்டு ஸ்மார்ட்போனின் அடுத்த புதிய மாடல் இது என்று பதிவு செய்துள்ளது. நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் மாடலில் வழங்கப்பட்டுள்ள ஃபிலிப் அப் கேமரா தொழில்நுட்பத்தைப் போலவே, இந்த மீட்டு போனிலும் சியோமி நிறுவனம் ஃபிலிப் அப் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாசா: இதுவரை தோன்றிடாத நாசா: இதுவரை தோன்றிடாத "ஸ்ட்ராபெர்ரி மூன்" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா?

உலகின் முதல் ஃபிலிப் அப் கேமரா

உலகின் முதல் ஃபிலிப் அப் கேமரா

அசுஸ் அறிமுகம் செய்த அசுஸ் 6Z ஸ்மார்ட்போன் மாடலை காட்டிலும் சியோமி ஒரு படி மேலே சென்று, ஃபிலிப் அப் கேமராவில் 3 கேமராக்களை பொருந்தியுள்ளது. அசுஸ் 6Z ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிலிப் அப் கேமராவில் 2 கேமராக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்டில் ஃபாரி என்ற பெயர்

லிட்டில் ஃபாரி என்ற பெயர்

மீட்டு அறிமுகம் செய்யப்போகும் இந்த ஸ்மார்ட்போனிற்கு "லிட்டில் ஃபாரி (Little Fairy)" என்று பெயரிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்னால் மீட்டு என்று லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிங்க் கிரேடியன்ட் கோட்டிங்குடன் கூடிய பிங்க் நிற பட்டன்களுடன் அற்புதமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு விலை தரமான ஏசி.!மனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு விலை தரமான ஏசி.!

48 மெகா பிக்சல் கேமரா

48 மெகா பிக்சல் கேமரா

மீட்டு ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள கேமராகளின் விபரங்கள் எதுவும் இப்பொழுது வரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் நமது கணிப்பின்படி நிச்சயம் அதில் உள்ள ஒரு கேமரா 48 மெகா பிக்சல் கொண்ட கேமராவாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, மற்ற இரண்டு கமெராவில் ஒன்று மேக்ரோ லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் கேமராவாக இருக்கக் கூடும்.

செல்ஃபி கிங் பட்டம் காய் மாறுமா?

செல்ஃபி கிங் பட்டம் காய் மாறுமா?

நிச்சயம் இந்த மீட்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்குச் சிறப்பான செல்ஃபி அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் செல்ஃபி கிங் என்று அழைக்கப்படும் அசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் பட்டம் வெகு விரைவில் இந்த மீட்டு போனிற்கு கைமாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<strong>ரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.!</strong>ரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.!

இந்திய சந்தையில் விரைவில்!

இந்திய சந்தையில் விரைவில்!

சியோமி மற்றும் மீட்டு நிறுவனம் இனைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள் மற்றும் எப்பொழுது இந்த ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் சந்தைக்குள் களமிறங்கும் என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மிக விரைவில் இந்தியா மற்றும் பிறநாடுகளில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi and Meitu Introduced The Worlds First Triple Flip up Camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X