இதுதான் உண்மையான 2025 Flagship போன்.. 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2 சிப் உடன் புதிய Xiaomi மாடல்!
என்னப்பா.. எல்லாரும் அவங்க-அவங்க 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செஞ்சிட்டீங்களா.. அப்போ நான் என்ட்ரி கொடுக்கலமா என்று கேட்கும்படியாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மீ அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை "பக்காவான" அம்சங்களுடன் பேக் செய்துவருகிறது.
என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? எப்போது அறிமுகம் செய்யப்படும்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 16 (Xiaomi 16) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னு சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2025 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படலாம்.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போ வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பகிர்ந்துள்ள தகவலின்படி ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் "6.3X" இன்ச் அளவிலான டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். அதாவது இது ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 6.31 இன்ச் முதல் 6.9 இன்ச் வரையிலாக.. எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்
பெரும்பாலும் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே தற்போதைய ஷாவ்மீ 15 மாடலில் உள்ளதை விட பெரியதாக இருக்காது. இருப்பினும் ஷாவ்மீ நிறுவனம் இதில் மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் என்று டிப்ஸ்டர் குறிப்பிடுகிறார். வெய்போவில் உள்ள டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் பதிவின்படி, ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
ஷாவ்மீ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போனில் உள்ள 5,240mAh பேட்டரியை விட இது கணிசமாக பெரியதாகும். இந்த அளவிலான பெரிய பேட்டரியை பெற, ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியை விட தடிமனான பாடியை கொண்டிருக்குமா என்பது குறித்து தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
சிப்செட்டை பொறுத்தவரை ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். குவால்காம் நிறுவனம் அதன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பின் மேம்படுத்தப்பட்ட "வாரிசை" அதே நேரத்தில் (செப்.2025 வாக்கில்) வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஸ்மார்ட்ப்ரைஸ் வழியாக கிடைத்த தகவலின்படி ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.70,000 க்குள் இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் FHD+ (1200 x 2670 பிக்சல்ஸ்) LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- OIS ஆதரவுடன் 50-மெகாபிக்ஸ் ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5240mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்


Click it and Unblock the Notifications