Home
Mobile

Xiaomi குட்டிப்புலி.. சின்ன டிஸ்பிளேவுடன் புது மினி போன்.. 7200mAh பேட்டரி + டூயல் 200MP கேமரா.. எந்த மாடல்?

10100mAh பேட்டரி கொண்ட ப்ரோ மேக்ஸ் மாடலுடன் சேர்த்து மொத்தம் 3 மாடல்களை உள்ளடக்கிய ரெட்மி நோட் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் லீக் ஆன வேகத்தில் ஷாவ்மீ 18 சீரீஸின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போனை பற்றிய சில முக்கிய விவரங்களும் வெளியாகியுள்ளது.

ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போனின் ப்ரோட்டோடைப் (Prototype), அதாவது பொறியியல் முன்மாதிரி ஆனது 7200mAh பேட்டரியை கொண்டிருப்பதாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக தகவல் கிடைத்துள்ளது. ஒப்பிடுகையில் இது ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனில் உள்ள 7,000mAh பேட்டரியை விட சற்று பெரிய கெப்பாசிட்டியாகும்.

Xiaomi குட்டிப்புலி.. சின்ன டிஸ்பிளேவுடன் புது மினி போன்!

சந்தையில் உள்ள மற்ற பெரிய அளவிலான ஸ்மார்ட்போன்கள், 8,000mAh மற்றும் 10,000mAh பேட்டரிகளை வழங்கும் நிலையில், காம்பாக்ட் (compact) அளவு கொண்ட இந்த ஷாவ்மீ போனுக்கு இது ஒரு சிறப்பான அம்சமாகும். ஷாவ்மீ 18 (Xiaomi 18) மாடல் ஆனது அதன் முந்தைய மாடலை விட பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று முந்தைய லீக்ஸ் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தன; தற்போது இந்த தகவல் அதற்கான துல்லியமான அளவை உறுதிப்படுத்துகிறது.

ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது எப்போது அறிமுகமாகும் ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் 2கே டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மிக மெல்லிய, சீரான பெசல்களுடன் (bezels) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் சூப்பர்பிக்சல் (SuperPixel) டிஸ்பிளே தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பும், ஸ்மார்ட்போனை கச்சிதமாகவும் கையாள்வதற்கு எளிதாகவும் வைத்திருக்கும் வகையில் அமையும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஷாவ்மீ 18 ப்ரோ மாடலில் உள்ள அதே 2என்எம் சிப் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 இடம்பெறலாம். இதன் மூலம், நெக்ஸ்ட் ஜெனரேஷன் 2என்எம் சிப்செட் மற்றும் டூயல் 200-மெகாபிக்சல் கேமரா அமைப்பை கொண்ட மிக சில காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் (flagship) போன்களில் ஒன்றாக இது அமையும். கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது பெரிய சென்சார்களுடன் கூடிய 200எம்பி ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

முன்னதாக ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த 3X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்ட முதல் ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ மாடலாகவும் இது இருக்கும். மேலும், அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் முழுமையான நீர்-எதிர்ப்புத் திறன் (waterproofing) ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கலாம். சார்ஜிங் வசதியை பொறுத்தவரை ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கலாம். ஷாவ்மீ 18 சீரிஸ் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரெட்மி நோட் 17 சீரீஸ்: ரெட்மி நிறுவனம் அடுத்த மாதம் அதன் ரெட்மி நோட் 17 சீரீஸ் (Redmi Note 17 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 17 (Redmi Note 17), ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- 1.5கே ரெசல்யூஷன் கொண்ட 6.83-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட்
- பேட்டரி அளவு குறித்த தகவல் இல்லை
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- 1.5கே பிளாட் டிஸ்பிளே பேனல்
- டிஸ்பிளே சைஸ் குறித்த விவரங்கள் இல்லை
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப்
- 9,000mAh பேட்டரி
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- நீர்-எதிர்ப்பு திறன்

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- 1.5கே ரெசல்யூஷன் ஆதரவுடன் கூடிய பிளாட் டிஸ்பிளே
- டிமென்சிட்டி 7500 (Dimensity 7500) சிப்செட்
- 10,100mAh பேட்டரி
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- டூயல் ஸ்பீக்கர்கள்
- முழுமையான நீர்-எதிர்ப்பு கொண்ட சேசிஸ் (fully water-resistant chassis)

Best Mobiles in India

English summary
Xiaomi 18 Tipped to Pack Compact Display 7200mAh battery dual 200MP Camera Setup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X