Home
Mobile

சிறப்பு.. Xiaomi புது மினி போன்.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite Gen 6 சிப்.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது 2026 செப்டம்பர் மாதம், நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 பிளாக்ஷிப் சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6) மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஷாவ்மீ 18 சீரிஸ் (Xiaomi 18 Series) மாடல்கள் ஆகும்.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் மட்டுமே முக்கிய அம்சமாக இருக்கப்போவதில்லை. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station - DCS) வழியாக, சியோமி 18 சீரிஸ் குறித்த முக்கிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு.. Xiaomi புது மினி போன்.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி!

டிசிஎஸ்-இன் புதிய பதிவின்படி, ஷாவ்மீயின் அடுத்த தலைமுறை ஷாவ்மீ 18 சீரிஸ், சுமார் 6.4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட ஒரு காம்பாக்ட் (மினி) பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே, பல பயனர்கள் நடுத்தர அளவு டிஸ்பிளே என்று கருதுவதற்கு நெருக்கமாக இருக்கும் என்றும் டிசிஎஸ் பதிவிட்டுளார்

மேலும் இது 19.5:9 விகிதம், பெரிய வளைவுகளை கொண்ட மூலைகள், மிகவும் குறுகிய மற்றும் சமச்சீரான பெசல்கள், மற்றும் ஒரு பிளாட் ஆன பேனல் டிசைன் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும், ஷார்ப் ஆன காட்சிகளுக்காக இந்த டிஸ்பிளே திறமையான 2கே ரெசொலூஷனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே மட்டுமினி இந்த சீரீஸில் இமேஜிங், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த ஹார்ட்வேர் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்

இதில் டூயல் 200-மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை முக்கிய மேம்பாடுகள் ஆக இருக்கும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் சுட்டிக்காட்டுகிறார். கமெண்ட்ஸ் செக்ஷனில், இதன் பேட்டரி திறன் குறித்து கேட்கப்பட்டபோது, ​​பேட்டரியின் எண் "7" இல் தொடங்கும் என்று டிசிஎஸ் பதிலளித்தார், இது சுமார் 7000mAh திறனை குறிக்கிறது.

ஷாவ்மீ 18 சீரிஸின் கீழ் வரும் மூன்று மாடல்களில் ஷாவ்மீ 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro Max) தான் மிகப்பெரிய மாடலாக இருக்கும் என்று அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. பெரிய மாடல் என்றால், பெரிய 6.9-இன்ச் 2கே ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப் மற்றும் 8500mAh பேட்டரியை பேக் செய்யல என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன்: 4 ஆண்டுகள் கழித்து ஷாவ்மீ நிறுவனம் இந்திய சந்தையில் அதன் டி சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட HDFC வங்கி, SBI கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி சலுகைக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் தேர்வு செய்யலாம்.

கூடுதலாக, HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.5,000 வரை கேஷ்பேக் பெறலாம். உடனடி வங்கி தள்ளுபடிக்குப் பிறகு, ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB வேரியன்ட்களின் விலைகள் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.59,999 ஆக குறைகின்றன.

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்
- 12GB LPDDR5x ரேம்
- லைக்கா-டியூன்டு கேமராக்கள் மற்றும் பிரத்யேக 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi 18 tipped to pack Compact Display 200MP Camera Snapdragon 8 Elite Gen 6 7000mAh battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X