மிரட்டி விட்டாப்ல.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?
டூயல் டிஸ்பிளே மட்டுமல்லாமல், டூயல் 200 எம்பி கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற முரட்டு பீச்சர்களுடன் சியோமி 18 ப்ரோ (Xiaomi 18 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் சியோமி 18 ப்ரோ மற்றும் சியோமி 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட மற்ற மார்கெட்களில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம் என்பதால், இங்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. டூயல் டிஸ்பிளே கொண்ட மாடலாக கிடைப்பதால், தனி வரவேற்பை பெற்று இருக்கிறது.

சியோமி 18 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 18 Pro Specifications): 6.4 இன்ச் (2436 x 1120 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் சியோமி டிராகன் கிரிஸ்டஸ் கிளாஸ் 3.0 (Xiaomi Dragon Crystal Glass 3.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
2.66 இன்ச் (912 x 596 பிக்சல்கள்) ஓஎல்இடி செகண்டரி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 2என்எம் (Snapdragon 8 Elite Gen 6 2nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 845 ஜிபியு (Adreno 845 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது. 4355எம்எம்² கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது. 200 எம்பி மெயின் கேமராவில் லைட் ஹண்டர் 960 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் எஸ்5கேஎச்பி5 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி51டி (OmniVision OV51D) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவிலும் ஓம்னிவிஷன் ஓவி51டி சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
லெய்கா கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த சியோமி 18 ப்ரோ இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 18 ப்ரோ இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.85,394 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.99,658 ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,13,917 ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,28,181 ஆகவும் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டிரான்ஸ்பரன்ட் ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ.1,42,445 ஆக இருக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White), ஐஸ் பீச் பிங்க் (Ice Peach Pink), ஸ்டார்ரி ப்ளூ (Starry Blue) மற்றும் ரெட் டிரான்ஸ்பரன்ட் (Red Transparent) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
