ஒத்த போனுக்கு மொத்தமும் மிரளுது.. 200MP + 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. புது Xiaomi போன்.. எந்த மாடல்?
மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படியான கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக சியோமி நிறுவனத்தின் சியோமி 18 ப்ரோ (Xiaomi 18 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேமரா, பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே கசிந்துள்ளன.
சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போனானது, டூயல் டிஸ்பிளே கொண்ட மாடலாக களமிறங்கி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுத்தது. ஆனால், சியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க உள்ளது.

சியோமி 17 ப்ரோ மாடலில் 6300mAh பேட்டரி கிடைத்தது. இதில் 7000mAh பேட்டரி கிடைக்க இருப்பது தெரிகிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக தெரியவந்துள்ளது. காம்பாக்ட் மாடலில் 7000mAh பேட்டரி, டூயல் 200 எம்பி கேமரா கிடைக்க இருப்பதால், சியோமி பிரியர்கள் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
சியோமி 18 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 18 Pro Specifications): டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்த பீச்சர்களின்படி, இதில் 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டே கேமரா கிடைக்கிறது. 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 6.3 இன்ச் டிஸ்பிளே மட்டுமே கிடைக்க இருக்கிறது. ஃபுல்-லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

ஆகவே, IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor) கொடுக்க உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. மேலும், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 (Snapdragon 8 Elite Gen 6) சிப்செட் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
சியோமி 17 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது. ஆகவே, இந்த சியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போனையும் இந்தாண்டு செப்டம்பர் மாதம் எதிர்பார்க்கலாம். இதில் டூயல் டிஸ்பிளே கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இது காம்பாக்ட் மாடலாக இருக்கிறது. அதே நேரத்தில் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாடலாகவும் இருக்கிறது.
சியோமி 17 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 17 Pro Specifications): 6.3 இன்ச் (2656 x 1220 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2.7 இன்ச் (904 x 572 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே பேக் பேனலில் கிடைக்கிறது. இதிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்து உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6300mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. சீன மார்கெட்டில் ரூ. 62,225 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, 18 ப்ரோ மாடலானது ரூ.72,000 பட்ஜெட்டில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








