Home
Mobile

அட்டை காப்பி ஆறுமுகம்.. Samsung-ன் லேட்டஸ்ட் அம்சத்தை காப்பி அடித்து புது Xiaomi போன்.. என்ன அம்சம்? மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது, சமீபத்தில் சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் (Galaxy S26 Series) வழியாக அறிமுகம் செய்த ஒரு முக்கியமான டிஸ்பிளே அம்சத்தை (Display Feature) காப்பி அடித்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடலில் ப்ரைவஸி டிஸ்பிளே டெக்னாலஜியை (Privacy Display technology) அறிமுகம் செய்திருந்தது. சுருக்கமாக, இந்த தொழில்நுட்பம் அருகில் இருப்பவர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை பார்க்க முடியாதபடி செய்யும்.

Samsung-ன் லேட்டஸ்ட் அம்சத்தை காப்பி அடித்து புது Xiaomi போன்?

இந்த் அம்சம் இயக்கப்பட்டு இருக்கும் போது, மற்றவர்கள் ஸ்க்ரீனை பார்க்கும் கோணங்கள் (viewing angles) மட்டுப்படுத்தப்படும். இதனால் ஸ்க்ரீனை நேரடியாக பார்க்கும் பயனருக்குத் தெளிவான காட்சி கிடைப்பதோடு, அருகில் அமர்ந்திருப்பவர்களோ அல்லது நின்றுகொண்டிருப்பவர்களோ திரையில் உள்ளவற்றை பார்ப்பது கடினமாகிறது.

இந்த அம்சத்தை தான் ஷாவ்மீ நிறுவனம் தன் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் ஷாவ்மீ 18 சீரிஸ் (Xiaomi 18 Serie ) ஸ்மார்ட்போன்களில் இடம்பெறலாம் என்பது போல் தெரிகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்துள்ள தகவல்களின்படி, ஷாவ்மீ அடுத்த தலைமுறை 2கே டிஸ்பிளே மற்றும் ஒருங்கிணைந்த தனியுரிமை பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு புதிய முதன்மை ப்ரோ மாடலை சோதித்து வருகிறது.

இந்த அம்சம், அருகிலுள்ளவர்கள் திரையில் உள்ள கன்டென்ட்டை பார்ப்பதை தடுக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை ஒருங்கிணைத்து, மெசேஜ்கள், பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஷாவ்மீ 18 சீரீஸின் கீழ் உள்ள ப்ரோ மாடல் என்றால், பெரும்பாலும் அது ஷாவ்மீ 18 ப்ரோவாக இருக்கலாம் என்று ஊகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சியோமி 18 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? இது 2026 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரீஸ், ஷாவ்மீயின் இரண்டாம் நிலை ரியர் டிஸ்பிளே வடிவமைப்பை தக்கவைத்துக்கொள்வதோடு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 200-மெகாபிக்சல் LOFIC ப்ரைமரி கேமராவையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில், இந்த போன்களில் பெரிய கார்னர் ரேடியஸ் கொண்ட டிஸ்பிளேக்கள், பயனுள்ள 2கே ரெசல்யூஷன் மற்றும் அதிகபட்ச ப்ரைட்னஸ் ஆகியவைகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு, ஷாவ்மீ நிறுவனம் இந்த விவரங்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், லீக் ஆன தகவல்கள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், ஷாவ்மீ 18 சீரீஸ் - ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் நிச்சயம் பேசுபொருளாகும்.

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன்: 4 ஆண்டுகள் கழித்து ஷாவ்மீ நிறுவனம் இந்திய சந்தையில் அதன் டி சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்
- 12GB LPDDR5x ரேம்
- லைக்கா-டியூன்டு கேமராக்கள் மற்றும் பிரத்யேக 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi 18 Pro Tipped to get Samsung Galaxy S26 Ultra Like Privacy Display Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X