ஸ்மார்ட்போனுனா இப்படி இருக்கனும்.. 200MP கேமரா.. 8500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் மாடலாக சியோமி 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. டூயல் டிஸ்பிளே, 200 எம்பி கேமரா, 8500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் கொண்ட இந்த சியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் இந்த சியோமி 18 ப்ரோ மேக்ஸ் வெளியாகி இருக்கிறது. முன்னதாக வெளியான சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை போலவே டூயல் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஆகவே, வழக்கமான டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேக் கேமராவை சுற்றி செகண்டரி டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. பீச்சர்களில் அப்கிரேட் பார்க்க முடிகிறது.

சியோமி 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Xiaomi 18 Pro Max Specifications): 6.9 இன்ச் (2624 x 1208 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10+ (HDR10+) மற்றும் டால்வி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி ஷீல்டு கிளாஸ் (Xiaomi Shield Glass) கிடைக்கிறது.
செகண்டரி டிஸ்பிளேவை பார்க்கையில், 2.9 இன்ச் (976 x 596 பிக்சல்கள்) அமோலெட (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 2 2என்எம் (Octa Core Snapdragon 8 Elite Extreme Gen 6 2nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அட்ரினோ 850 ஜிபியு (Adreno 850 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 4 (Xiaomi HyperOS 4) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேக்ரோ லென்ஸ் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு லைட் ஃப்யூசன் சென்சார் மற்றும் ஹைப்பர் ஓஐஎஸ் கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டெலிமேக்ரோ சப்போர்ட் கொடுக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
8500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 235 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,00,001 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,14,289 ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,28,577 ஆக இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் மாடலின் விலை ரூ.1,42,865 கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டிரான்ஸ்பரன்ட் எடிஷனின் விலை ரூ.1,57,153 ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாக், ஒயிட், பர்பிள் மற்றும் கிரீன் கலர்களில் கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
