Home
Mobile

Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 7000mAh பேட்டரி, டூயல் 200MP கேமரா, Privacy டிஸ்பிளேவுடன் புது Pro போன்!

வருகிற செப்டம்பர் மாதத்தில், ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது ஷாவ்மீ 18 சீரீஸ் (Xiaomi 18 Series) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல சீன அறிமுகத்தை தொடர்ந்து, இந்த சீரிஸின் கீழ் வந்த சில மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஷாவ்மீ 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு வெளியான ஷாவ்மீ 17 மாடலில் 6.3-இன்ச் டிஸ்பிளே இருந்தது; ஆனால் அதன் அடுத்தகட்ட மாடலில் சுமார் 6.4-இன்ச் அளவுள்ள சற்று பெரிய டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 7000mAh பேட்டரி, டூயல் 200MP கேமரா!

மேலும் ஷாவ்மீ 18 ப்ரோ (Xiaomi 18 Pro) மாடலும் அதே அளவு டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும், ஆனால் சாதாரண ஷாவ்மீ 18 மாடலை விட சிறந்த கேமராக்களைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 18 ப்ரோ மாடலில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக லீக் ஆன தகவல்களின்படி, ஷாவ்மீ 18 ப்ரோ மாடலானது, ஷாவ்மீ 18 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 18 Pro Max) மாடலில் உள்ள அதே டிஸ்பிளே தொழில்நுட்பத்தை கொண்டிருக்காவிட்டாலும், பல பிளாக்ஷிப் மேம்பாடுகளை கொண்டிருக்கலாம். இந்த போன் மிக தெளிவான ஸ்க்ரீன் மற்றும் மிக குறுகிய, சீரான பெஸல்களை (திரையை சுற்றியுள்ள விளிம்புகள்) கொண்டிருக்கலாம்

மேலும் பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் [பிங்கர் பிரிண்ட் சென்சார் (ultrasonic in-display fingerprint sensor) இடம்பெறலாம். சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6-சீரிஸ் (Snapdragon 8 Elite Gen 6-series) ஃபிளாக்ஷிப் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரி மூலம் இயங்கும்.

சார்ஜிங் சப்போர்ட்களை பொறுத்தவரை இது 100W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை ஆதரிக்கும். இதில் இரட்டை 200-மெகாபிக்சல் கேமரா அமைப்பு இடம்பெறும், அதில் குறைந்தது ஒரு கேமராவிலாவது மிகப் பெரிய இமேஜ் சென்சார் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது எளிமையான வடிவமைப்பை கொண்டிருப்பதோடு, மிக சிறந்த நீர் எதிர்ப்புத் திறனையும் (water resistance) வழங்கும்.

முந்தைய அறிக்கைகளின்படி, சியோமி 18, 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களிலும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கும்; இதில் ப்ரோ மாடல்கள் டூயல் 200-மெகாபிக்சல் கேமராக்களையும், சாதாரண மாடல் ஒரு 200-மெகாபிக்சல் கேமராவையும் கொண்டிருக்கும். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட லீக் தகவல்கள் ஷாவ்மீ 18 ப்ரோ மாடலை பற்றியதாகவே தெரிகிறது.

சியோமி 18 ப்ரோவின் கேமரா அமைப்பில், LOFIC தொழில்நுட்பத்துடன் கூடிய 200-மெகாபிக்சல் SmartSens ப்ரைமரி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனுடன் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இணைக்கப்படலாம். இப்போது வரை, பேட்டரி அளவு பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் இது சுமார் 7000mAh திறன் கொண்ட பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த ஸ்மார்போன் அத ரியர் டிஸ்பிளேவையும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும், ஆனால் அது முன்பை விட அதிக அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் முன்பக்க ஸ்க்ரீன் ஆனது சாம்சங் (Samsung) போன்களில் உள்ளதைப் போன்ற 'பிரைவசி டிஸ்ப்ளே' (Privacy Display) அம்சத்துடன் வரக்கூடும் என்றும் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது

ஷாவ்மீ 18 ப்ரோ மற்றும் ஷாவ்மீ 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த் சீரீஸின் ஸ்டாண்டர்ட் மற்றும் அல்ட்ரா மாடலை பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்தியது. எனவே, 2026-ஆம் ஆண்டு டிசம்பரில் தான் ஷாவ்மீ 18 அல்ட்ரா (Xiaomi 18 Ultra) அறிமுகம் செய்யப்படலாம், அதோடு ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 18 மாடலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 18 Pro Display Chipset Camera Battery Fast Charging Details Launch Timeline Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X