Xiaomi அறிமுகம் செய்த புதிய ஃபோல்ட் போன்.. 200எம்பி கேமரா.. 7.58-இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
ஷாவ்மீ நிறுவனம் ஷாவ்மீ 18 ஃபோல்ட் (Xiaomi 18 Fold) போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஷாவ்மீ 18 ஃபோல்ட் அம்சங்கள் (Xiaomi 18 Fold Specifications): 7.58-இன்ச் போல்டபிள் AMOLED டிஸ்பிளே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

அதேபோல் 5.38-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளாஸ், டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3.0 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
டெகா-கோர் Xring O3 AI பிராசஸர் உடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன் வெளியாகி உள்ளது.
ஷாவ்மீ ஹைபர்ஓஎஸ் 4 (Xiaomi HyperOS 4) மூலம் ஷாவ்மீ 18 ஃபோல்ட் இயங்குகிறது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஷாவ்மீ மாடல் வெளிவந்துள்ளது.
OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா உடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த புதிய ஷாவ்மீ போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம்.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டூயல் 115 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஷாவ்மீ 18 ஃபோல்ட் விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலின் விலை 10999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,54,775)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலின் விலை 11999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,68,775)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலின் விலை 12999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,82,920)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலின் விலை 14999 yuan (இந்திய மதிப்பில் ரூ.2,11,065)-ஆக உள்ளது.
சீனாவில் செப்டம்பர் 10-ம் தேதி காலை 10 மணிக்கு இந்த புதிய ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
