Home
Mobile

செப்டம்பர் 7-ல் களமிறங்கும் புதிய ஷாவ்மீ போன்.. 200எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ஷாவ்மீ நிறுவனம் தனது புதிய ஷாவ்மீ 18 ஃபோல்ட் (Xiaomi 18 Fold) ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 7-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானதும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஷாவ்மீ 18 ஃபோல்ட் அம்சங்கள் (Xiaomi 18 Fold Specifications): 7.58-இன்ச் போல்டபிள் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் ஸ்மார்ட்போன். மேலும் 5.38-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இந்த புதிய போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம்.

செப்டம்பர் 7-ல் களமிறங்கும் புதிய ஷாவ்மீ  போன்.. எந்த மாடல்?

ஷாவ்மீ 18 ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் அல்லது அதைவிட மேம்பட்ட செயல்திறன் கொண்ட சிப்செட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி 3.5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Xring O3 மூலம் இந்த புதிய ஷாவ்மீ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. உலக சந்தையில் இந்த போன் ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஷாவ்மீ 18 ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

செப்டம்பர் 7-ல் களமிறங்கும் புதிய ஷாவ்மீ  போன்.. எந்த மாடல்?

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3.0 மற்றும் 7-சீரிஸ் அலுமினியம் அலாய் ஃபிரேம் ஆகியவற்றின் உதவியால், இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன் 1.2 மீட்டர் உயரம் வரை கீழே விழுந்தாலும் சேதமடையாது என்று ஷாவ்மீ நிறுவனம் கூறியுள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடலில் உள்ளன. குறிப்பாக மற்ற போல்டபிள் போன்களை விட இந்த புதிய ஷாவ்மீ போல்டபிள் போன் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: xiaomi

Best Mobiles in India

English summary
Xiaomi 18 Fold China Launch Date Announced: check All details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X