Home
Mobile

OnePlus, Oppo-லாம் கடைய சாத்து! Xiaomi T-சீரிஸ் is BACK.. 8000mAh பேட்டரி Max மாடலுடன் மொத்தம் 3 புது போன்கள்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில நாட்களாகவே "எப்போது அறிமுகம்?", "எத்தனை மாடல்கள் வருது?" என்கிற எதிர்பார்ப்பை கிளப்பிய ஷாவ்மீ 17டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது.

ஷாவ்மீ 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதியில், மே 28 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகமாகிறது என்று செய்திகள் வருகின்றன. டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, சியோமி 17டி மற்றும் சியோமி 17டி ப்ரோ (Xiaomi 17T Pro) ஆகியவைகள் மே 28 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக உள்ளது.

 Xiaomi T-சீரிஸ் is BACK.. Max மாடலுடன் மொத்தம் 3 புது போன்கள்!

மேலும் அவர், ஷாவ்மீ 17டி சீரிஸ் உடன் சேர்த்து சியோமி 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) மாடலை இந்தியா உட்பட உலகச் சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார். இது நடந்தால், இந்தியாவில் சியோமியின் டி-சீரிஸ்-க்கு இதுவொரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசமாக அமையும்.

நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ இதுவரை எம்ஐ 10டி (Mi 10T), எம்ஐ 10டி ப்ரோ (Mi 10T Pro) மற்றும் ஷாவ்மீ 11டி ப்ரோ (Xiaomi 11T Pro) ஆகிய மூன்று டி-சீரிஸ் போன்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பிறகு, ஷாவ்மீ தனது பிராந்திய உத்தியை மறுசீரமைத்ததால், உலகளாவிய 12டி, 13டி மற்றும் 14டி சீரிஸ்களின் இந்திய அறிமுகங்களை முற்றிலுமாக தவிர்த்தது.

அதனால்தான் சியோமி 17டி சீரிஸின் இந்தியா அறிமுகம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. குறிப்பாக, ரூ.50,000-க்கும் மேற்பட்ட விலைப்பிரிவில் ஒன்பிளஸ், விவோ மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இந்த நேரத்தில், இந்தியாவில் பிரீமியம் பிரிவில் தனது இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஷாவ்மீ யற்சிப்பதற்கான ஒரு சமிக்ஞையாக இது அமையக்கூடும்.

சியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்: லீக் ஆன தகவல்களின்படி, சியோமி 17டி மற்றும் 17டி ப்ரோ மாடல்கள், ஷாவ்மீயின் புதிய பிளாட் டிஸ்பிளே வடிவமைப்பு, மெல்லிய பெசல்கள் மற்றும் ஓரளவு கச்சிதமான அளவுகளை கொண்டிருக்கும். லீக் ஆன ரெண்டர்களின்படி, ஷாவ்மீ 17டி மாடல் பிளாஸ்டிக் ஃபிரேமை பயன்படுத்தக்கூடும், அதே சமயம் ப்ரோ மாடல் மிகவும் பிரீமியம் மெட்டல் கட்டமைப்பிற்கு மாறக்கூடும்.

ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட், 67W சார்ஜிங்குடன் கூடிய 6,500mAh பேட்டரி, லைக்கா ஆதரவுடனான ட்ரிபிள் 50MP பிரைமரி + 50MP டெலிஃபோட்டோ + 12MP அல்ட்ராவைடு கேமரா செட்டப்பை எதிர்பார்க்கலாம்.

ஷாவ்மீ 17டி ப்ரோ மாடலில், கொஞ்சம் பெரிய 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு, மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட், 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இன்னும் கொஞ்சம் பெரிய பேட்டரி ஆகியவற்றுடன் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.9-இன்ச்1.5K LTPO பிளாட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 8,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்
- 200MP சாம்சங் ஐசோசெல் HP-சீரிஸ் ப்ரைமரி கேமரா
- 50MP அல்ட்ராவைடு மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள்

எதிர்பார்க்கப்படும் விலை: ஷாவ்மீ 17டி சீரிஸ் உலகளவில் பிரீமியம் பிரிவில் உறுதியாக நிலைபெறக்கூடும். ஷாவ்மீ 17டி மாடலின் ஆரம்ப விலை EUR 749 (சுமார் ரூ.84,000) ஆக இருக்கும் என்றும், ப்ரோ மாடலின் விலை EUR 999 (சுமார் ரூ.1.12 லட்சம்) வரை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் கூற்றுப்படி, இந்தியாவில் இதன் விலைகள் சற்று குறைவாக இருக்கலாம்.

ஷாவ்மீயின் இறுதி விலை நிர்ணய உத்தியை பொறுத்து, இந்த சீரிஸ் ஒன்பிளஸ் 15, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9, விவோ எக்ஸ்300 எப்இ, ரியல்மி ஜிடி 8 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்300 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக நிற்கலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 மேக்ஸ் மாடலையும் போட்டி விலையில் இந்தியாவிற்கு கொண்டு வந்தால் - பிளாக்ஷிப் ஹார்ட்வேர்ஸ் உடன் பேட்டரி லைஃப்பிறக்கும் அதிக முன்னுரிமை அளிப்பதால் - இது இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான பிளாக்ஷிப் வெளியீடுகளில் ஒன்றாக மாறக்கூடும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 17T Xiaomi 17T Pro Tipped to Launch Globally on May 28 Xiaomi 17 Max Also Coming to India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X