7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. முரட்டு Xiaomi ஸ்மார்ட்போன்.. வெளியீட்டுக்கு முன்பே கசிந்த விலைகள்!
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களான சியோமி 17டி (Xiaomi 17T) மற்றும் சியோமி 17டி ப்ரோ (Xiaomi 17T Pro) ஆகிய மாடல்கள் வருகிற மே 28 தேதியன்று குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இந்த மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட இருக்கும் பல்வேறு நாடுகளின் விலை விவரங்கள் கசிந்துள்ளன.
மே 28 தேதியில் குளோபல் மார்கெட்டில் வெளியாகின்றன. இதில் சியோமி 17டி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதை சியோமி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனாலேயே விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்கள் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

குளோபல் மார்கெட்டில் விலை விவரங்கள் கசிந்துள்ளதால், கிட்டத்தட்ட பட்ஜெட் செக்மெண்ட்டை தெரிந்து கொள்ள முடியும். பல்வேறு நாடுகளின் மார்கெட்டில் கசிந்துள்ள விலை விவரங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன்களின் தோராயமான இந்திய மதிப்பும் இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ரேம், மெமரி வேரியண்டகளின் அடிப்படையில் விலைகளை பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): சியோமி 17டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை AED 2,599 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.68,000ஆக இருக்கிறது. இந்த மார்கெட்டில் சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் கசியவில்லை. இருப்பினும், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஐரோப்பிய மார்கெட்டுகளில் 2 மாடல்களின் விலைகளும் கசிந்துள்ன.
பிலிப்பைன்ஸ் (Philippines):
சியோமி 17டி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை PHP 33,999 ஆக இருக்கிறது. (சுமார் ரூ.52,000)
சியோமி 17டி ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை PHP 37,999 ஆக இருக்கிறது. (சுமார் ரூ.59,000)
சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை PHP 45,999ஆக இருக்கிறது. (சுமார் ரூ.71,000)
சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை PHP 47,999 ஆக இருக்கிறது. (சுமார் ரூ.74,000)
ரஷ்யா (Russia):
சியோமி 17டி ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை RUB 51,625 ஆக இருக்கிறது. (சுமார் ரூ.68,000)
சியோமி 17டி ஸ்மார்ட்போனின் 512GB ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை RUB 54,537 ஆக இருக்கிறது. (சுமார் ரூ.72,000)
சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை RUB 68,535ஆக இருக்கிறது. (சுமார் ரூ.91,000)
சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை RUB 81,861ஆக இருக்கிறது. (சுமார் ரூ.1 லட்சம் மேல்)
ஐரோப்பிய சந்தைகளில் இதன் ப்ரோ (Pro) மாடல் 1,000 யூரோக்களை (ரூ.1 லட்சம் மேல்) எட்டலாம் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் வரிகளை பொறுத்து இந்த விலைகளில் மாறுபாடுகள் இருக்கும். இந்தியாவில் ரூ.50,000 பட்ஜெட்டுக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப விலையே இவ்வளவு இருக்க வாய்ப்புள்ளது.
சியோமி 17டி மற்றும் சியோமி 17டி அம்சங்கள்: சியோமி 17டி மாடலில் 6.59 இன்ச் டிஸ்பிளே, ப்ரோ மாடலில் 6.83 இன்ச் டிஸ்பிளே வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Dimensity 8500 Ultra) சிப்செட் 17டி மாடலும், ப்ரோ மாடலில் டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட்டும் கிடைக்க இருக்கிறது.
17டி மாடலில் 6500mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ப்ரோ மாடலில் 7000mAh பேட்டரியுடன் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இரண்டு போன்களின் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications