Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.5,000 ஆஃபரில் 6500mAh பேட்டரி Xiaomi 5G ஸ்மார்ட்போன்.. 67W சார்ஜிங்.. 50MP கேமரா!

இந்திய மார்கெட்டில் சியோமி பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சியோமி 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.5,000 தள்ளுபடி கிடைப்பதால், விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 6500mAh பேட்டரி, 67W சார்ஜிங் மற்றும் ஓஐஎஸ் கேமரா கொடுத்துள்ளது.

10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 120எக்ஸ் ஏஐ அல்ட்ரா ஜூம் (AI Ultra Zoom) கொண்ட மாடலாக சியோமி 17டி ஸ்மார்ட்போன் களமிறங்கி இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கியது. இப்போது, அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.5,000 ஆஃபரில் 6500mAh பேட்டரி Xiaomi 5G போன்!

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து நேரடியாக ரூ.5,000 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.54,999 ஆரம்ப விலைக்கு இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும். 2 சதவீத கூப்பன் டிஸ்கவுண்ட் பிரைம் மெம்பர்களுக்கு கிடைக்கிறது.

சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core Dimensity 8500 Ultra 4nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. லைட் ப்யூஷன் 800 சென்சார் கொண்ட 50 எமிபி மெயின் கேமராவை கொண்டுள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது.

12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் 5எக்ஸ் இன்சென்சார் ஜூம், 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 120எக்ஸ் ஏஐ அல்ட்ரா ஜூம் கிடைக்கிறது. மேலும், ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது. லெய்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் கொண்டுள்ளது.

4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K ரெசொலூஷன் கொண்ட 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. 67W ஹைப்பர்சார்ஜ் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 8.17 மிமீ தடிமன் உள்ளது. 200 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. வயலெட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 17T With 12GB RAM Selling At Rs 5000 Discount on Amazon Check Effective Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X