Home
Mobile

Xiaomi நாளை இந்தியாவில் களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி 17டி(Xiaomi 17T) ஸ்மார்ட்போன் நாளை (ஜூன் 4) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T specifications): தரமான ஆக்டா கோர் டைமன்சிட்டி 8500-அல்ட்ரா 4என்எம் (Octa-Core Dimensity 8500-Ultra 4nm) சிப்செட் உடன் சியோமி 17டி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

Xiaomi நாளை இந்தியாவில் களமிறக்கும் புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 6.59-இன்ச் டிஸ்பிளே உடன் சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2756 x 1268 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), டால்பி விஷன், எச்டிஆர் 10, டால்பி விஷன், டிசி டிம்மிங், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதுவும் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சியோமி 17டி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் Xiaomi Hyper OS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 50எம்பி Light Fusion 800 மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி periscope டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சியோமி 17டி. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த புதிய சியோமி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் உள்ளன.யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி ஆடியோ போன்ற வசதிகளுடன் இந்த சியோமி போன் வெளிவரும்.

Xiaomi நாளை இந்தியாவில் களமிறக்கும் புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி 17டி ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த சாதனம்.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், கியூஇசட்எஸ்எஸ் (QZSS), குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்த சியோமி போனின் எடை 200 கிராம் ஆகும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.65,999 விலையில் இந்த புதிய சியோமி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 17T will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X