ஜூன் 4 குறிச்சாச்சு.. 6500mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது Xiaomi ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
சியோமி 17டி ( Xiaomi 17T) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. குளோபல் மார்கெட்டின் வெளியீட்டை தொடர்ந்து, இந்தியாவில் வெளியாக இருப்பதால், முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜூன் 4ஆம் தேதி இந்திய மார்கெட்டில் சியோமி 17டி வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. முக்கிய பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 28ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் சியோமி 17டி சீரிஸ் வெளியாகிறது. இதில் சியோமி 17டி மட்டுமல்லாமல், சியோமி 17டி ப்ரோ களமிறங்க இருக்கிறது.

இதனால், இந்த மாடல்களின் பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. குளோபல் மார்கெட்டில் வெளியாகிய பிறகு அடுத்த வாரத்திலேயே இந்தியாவில் வெளியாக இருப்பதால், இந்திய வெர்ஷனிலும் குளோபல் வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களே இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குளோபல் மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.
சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுத்து இருக்கிறது.
டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core Dimensity 8500 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமராவில் எப்/1.7 அபெர்சர் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. எப்/3.0 அபெர்சர், ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் லெய்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் (Leica Summilux Optical Lens) கொண்ட கேமரா செட்டப்பாக இருக்கிறது.
32 எம்பி செல்பீ கேமராவை இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 67W ஹைப்பர்சார்ஜ் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளது. விலை விவரங்களும் கசிந்துள்ளன.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.84,000 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகும் வெர்ஷனுக்கு கசிந்தவையாகும். இந்தியாவிலும் இதே வெர்ஷன் கிடைக்குமா என்பது அடுத்தடுத்து வெளியாகும் பீச்சர்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications