அதிருது இந்திய மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய சியோமி 5ஜி போன்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): டைமன்சிட்டி 8500 அல்ட்ரா எஸ்ஒசி (Dimensity 8500 Ultra SoC) சிப்செட் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.59-இன்ச் 1.5 கே AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், சியோமி டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் (Xiaomi Dragon Crystal Glass) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளம் மூலம் இந்த புதிய சியோமி 17டி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் AI எஞ்சின், ஹைப்பர் AI டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
இந்த சியோமி போன் Leica கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி OIS ஆதரவு கொண்ட 50எம்பி Light Fusion 800 சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த கேமராக்கள் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.
அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது சியோமி 17டி போன். 5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போனில் உள்ளன.
குறிப்பாக 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சியோமி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications