மே 28 குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனமானது சியோமி 17டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த வார இறுதியில் குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் சியோமி 17T (Xiaomi 17T) மற்றும் சியோமி 17T ப்ரோ (Xiaomi 17T Pro) ஆகிய இரண்டு மாடல்கள் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சியோமி 17டி மாடல் அடுத்த மாதம் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.
இருப்பினும், பிரீமியம் மாடலான சியோமி 17டி ப்ரோ Pro இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை. சியோமி நிறுவனமும் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நேரத்தில் குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கும் சியோமி 17டி ப்ரோ மாடலின் சிப்செட் மற்றும் பேட்டரி விபரங்களை அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.

சியோமி 17டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது, மீடியாடெக் சிப்செட் பயன்படுத்தப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இந்த 17டி ப்ரோ மாடலானது 3என்எம் கீழ் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் கொடுக்க இருக்கிறது.
மேலும், 7000mAh சிலிகான் கார்பன் பேட்டரி கொடுக்க உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜில் செய்தால், தொடர்ந்து 9.5 மணி நேரம் வரை வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் என்று சியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த சீரிஸ் மே 28 ஆம் தேதியன்று குளோபல் மார்கெட்டில் அறிமுகமாக இருக்கின்றன. வழக்கமாக லெய்கா கேமராவுடன் கிடைக்க இருக்கிறது.
ஆனால், ஸ்குவார்-ஷேப்டு கேமரா டெக்கோ (Square-shaped Camera Deco) கொடுக்க இருக்கிறது. ப்ரோ மாடலில் டீப் ப்ளூ (Deep Blue) கலரும், ஸ்டாண்டர்ட் மாடலில் வயலட் (Violet) கலரும் கிடைக்க இருக்கின்றன. இந்தியாவில் சியோமி 17டி ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 4ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
சியோமி 17டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 17T Pro Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கிடைக்கிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 9500 3என்எம் சிப்செட் வருகிறது.
லெய்கா லென்ஸ் கொண்ட ட்ரிபிள் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50கியூ சென்சார், எப்/1.67 அபெர்சர் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 டெலிஃபோட்டோ கேமராவில் 5x பெரிக்ஸோப் ஜூம், ஓஐஎஸ் டெக்னாலஜி, எப்/3.0 அபெர்சர் கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்ஃபி கேமரா கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 100W ஹைப்பர்சார்ஜ் (Wired) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கிடைக்கிறது. IP68 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட், இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது. இவை எதிர்பார்க்கப்படும் பீச்சர்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications