சியோமி களமிறக்கிய புதிய 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17டி ப்ரோ (Xiaomi 17T Pro) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி68 ரேட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சியோமி 17டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 17T Pro specifications): 6.59-இன்ச் டிஸ்பிளே உடன் சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2756 x 1268 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), டால்பி விஷன், எச்டிஆர் 10, டால்பி விஷன், டிசி டிம்மிங், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் ( Octa-Core Dimensity 9500 3nm) சிப்செட் உடன் சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 1TB வரை மெமரி ஆதரவுடன் சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் Xiaomi Hyper OS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி Light Fusion 950 மெயின் சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி periscope டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த புதிய சியோமி போனில் உள்ளன.யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி ஆடியோ போன்ற வசதிகளுடன் இந்த சியோமி போன் வெளிவந்துள்ளது.
70000எம்ஏஎச் பேட்டரி உடன் சியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த சாதனம்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், கியூஇசட்எஸ்எஸ் (QZSS), குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த சியோமி போனின் எடை 219 கிராம் ஆகும். டீப் ப்ளூ, டீப் வயலட் மற்றும் பிளாக் கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
சியோமி 17டி ப்ரோ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 17டி ப்ரோ மாடலின் விலை EUR 899.99 (இந்திய மதிப்பில் ரூ.1,00,195)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சியோமி 17டி ப்ரோ மாடலின் விலை EUR 999.99 (இந்திய மதிப்பில் ரூ.1,11,330)
12ஜிபி ரேம் + 1TB மெமரி கொண்ட சியோமி 17டி ப்ரோ மாடலின் விலை EUR 1099.99 (இந்திய மதிப்பில் ரூ.1,22,460)


Click it and Unblock the Notifications