Home
Mobile

மொத்த உலகமும், இந்தியாவும் எதிர்பார்க்கும் 7000mAh பேட்டரி Xaiomi 5ஜி போன்.. நாளை, மே.28 அறிமுகம்!

ஷாவ்மீ 17டி சீரிஸ் (Xiaomi 17T Series) ஸ்மார்ட்போன்கள் இந்த வார இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரீஸில் ஷாவ்மீ 17டி மற்றும் ஷாவ்மீ 17டி ப்ரோ (Xiaomi 17T Pro) என இரண்டு மாடல்கள் இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ப்ரோ மாடல் நாட்டில் அறிமுகமாகுமா இல்லையா என்பது இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் உலகளாவிய அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஷாவ்மீ நிறுவனம் வரவிருக்கும் ஷாவ்மீ 17டி ப்ரோ ஸ்மார்ட்போனை பற்றிய பல்வேறு விவரங்களை - பேட்டரி திறன் மற்றும் சிப்செட் - வெளியிட்டுள்ளது.

மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் 7000mAh பேட்டரி Xaiomi 5ஜி போன்!

ஷாவ்மீ 17டி ப்ரோ சிப்செட், பேட்டரி: எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவில், வரவிருக்கும் ஷாவ்மீ 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட பிளாக்ஷிப் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது

இதன் பொருள், மற்ற ஷாவ்மீ 17 சீரிஸ் போன்களில் உள்ள 3என்எம்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டிற்கு பதிலாக, மீடியாடெக் சிப்செட்டைக் கொண்டிருக்கும் இந்த சீரீஸின் முதல் போன் இதுவாகும். இது தவிர, ஷாவ்மீ 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியுடன் வரும் என்று ஷாவ்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் ஒரே சார்ஜில் 9.5 மணிநேரம் வரை தொடர்ச்சியான வீடியோ ரெக்கார்டிங்கை வழங்கும். இதுதவிர்த்து ஷாவ்மீ 17டி ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் இன்னும் மறைத்திரையில் தான் உள்ளன. முழு அம்சங்களும் உலகளாவிய வெளியீட்டு நாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகம்? ஷாவ்மீ 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஷாவ்மீ 17டி உடன் சேர்ந்து மே 28 ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன் அமேசான் வழியாக நாட்டில் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கும், இது 5x ஆப்டிகல் ஜூம், 10x "ஆப்டிகல் குவாலிட்டி" ஜூம் மற்றும் ஏஐ மூலம் மேம்படுத்தப்பட்ட 120x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஷாவ்மீ 17டி சீரீஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, சதுர வடிவ வடிவமைப்பில், லைக்கா-டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மாடல் குறைந்தபட்சம் டீப் ப்ளூ கலரில் அறிமுகம் செய்யப்படலாம். அதே சமயம் ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17டி மாடல் உலகளவில் குறைந்தபட்சம் வயலட் கலரில் விற்பனைக்கு வரலாம்.

ஷாவ்மீ 17டி என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, ஷாவ்மீ 17டி இந்தியாவில் ரூ.59,999 என்கிற எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம். சியோமி 17டி ஸ்மார்ட்போன் ஆனது 2 வேரியன்ட்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்கள்.

மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் வழியாக லீக் ஆன விலை விவரங்கள் உண்மையாக இருந்தால், ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 15ஆர், ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி மற்றும் மோட்டோரோலா சிக்னேச்சர் போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi 17T Pro Chipset Battery Confirmed Ahead Global Launch on May 28 What About India launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X