OnePlus, Oppo-லாம் ஓரம்போ.. 4 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் Xiaomi T-சீரிஸ் போன்.. மாடல், Specs, விலை?
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாத டி-சீரிஸ் ஸ்மார்ட்போனை, ஷாவ்மீ நிறுவனம் மீண்டும் கொண்டுவர உள்ளது. அது ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போன் ஆகும். எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது நீண்ட காலம் கழித்து மட்டுமல்ல, ஒரு பெரிய பேட்டரி மற்றும் லைக்கா ஆதரவு இமேஜிங் அம்சங்களுடன், ஒரு கேமரா சென்ட்ரிக் பிரீமியம் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்று ஆரம்பகட்ட டீசர்கள் தெரிவிக்கின்றன. ஷாவ்மீ 17டி சீரிஸ் மே 28 அன்று உலகளவில் அறிமுகமாகிறது, அதை தொடர்ந்து இதன் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் (ஷாவ்மீ 17டி) ஜூன் 4 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாவ்மீ 17டி என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, ஷாவ்மீ 17டி இந்தியாவில் ரூ.59,999 என்கிற எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம். சியோமி 17டி ஸ்மார்ட்போன் ஆனது 2 வேரியன்ட்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்கள்.
மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் வழியாக லீக் ஆன விலை விவரங்கள் உண்மையாக இருந்தால், ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 15ஆர், ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி மற்றும் மோட்டோரோலா சிக்னேச்சர் போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஷாவ்மீ 17டி ஆனது 6.59-இன்ச்1.5கே LTPS AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் 3500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த போன், மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் AnTuTu மதிப்பெண்கள் 2.2 மில்லியனை தாண்டும் என்று சியோமி கூறுவதாக தெரிகிறது. ஆக நல்ல பெர்பார்மென்ஸை எதிர்பார்க்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ 17டி-யின் கேமரா செட்டப்பானது - இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக தெரிகிறது. இந்த போனில், லைக்கா ஆதரவுடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50MP லைட் ஹன்டர் 800 ப்ரைமரி சென்சார், 5X ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம்
இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ரியர் கேமராக்களிலும் 4K 60fps ரெக்கார்டிங் வசதி வழங்கப்படும் என்றும், செல்பீ கேமராவானது 4K 30fps ரெக்கார்டிங் வசதியை ஆதரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது 67W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ டீசர்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போனில் பிளாட் ஆன விளிம்புகள், லைக்கா முத்திரையிடப்பட்ட ரியர் கேமராக்கள் மற்றும் வயலட், டீப் ப்ளூ உள்ளிட்ட குறைந்தபட்சம் இரண்டு க்ளோபல் கலர் ஆப்ஷன்கள் இடம்பெறும். மேலும் ஷாவ்மீ 17டி ஆனது ஆண்ட்ராய்டு 16 மற்றும் IP68 ரேட்டிங் உடன் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
OPINION: வலுவான ஜூம் கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் கொண்ட ஒரு பிரீமியம் போனை தேடும் வாடிக்கையாளர்கள், இந்த பிரிவில் செயல்திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில போட்டியாளர்களை விட ஷாவ்மீ 17டி மாடலை - மிகவும் கவர்ச்சிகரமான ஆப்ஷன் ஆக காணலாம். இருப்பினும், நீடித்த கேமிங் செயல்திறனுக்கோ அல்லது சமீபத்திய முதன்மை சிப்செட்டுக்கோ முன்னுரிமை அளிக்கும் பயனர்கள், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மூலம் இயங்கும் மாற்று ஸ்மார்ட்போன்களை ஆராயலாம்.


Click it and Unblock the Notifications