ரூ.10,000 எகிறிடுச்சு.. கேமரா சும்மா அப்படி இருக்கும்.. AMOLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பிரீமியம் கேமரா மாடலாக வெளியாகிய சியோமி 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போனும் சேர்ந்துவிட்டது. மார்கெட்டில் வெளியாகியபோது கிடைத்த விலையில் இருந்து ரூ.10,000 உயர்ந்துவிட்டது. இருப்பினும், ரூ.5,000 தள்ளுபடியில் கிடைக்கிறது.
இந்திய மார்கெட்டில் வெளியாகிய போது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999 ஆக இருந்தது. அமேசான் தளத்தில் தள்ளுபடி போக ரூ.54,999 விலைக்கு கிடைத்தது. ஆனால், இப்போது, அதே அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.69,999 ஆக இருக்கிறது. ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், ரூ.5,000 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக ரூ.64,999 விலைக்கு கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் கோடெக் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு இந்த ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் வயலெட் (Violet) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
பிரீமியம் கேமரா பீச்சர்களை கொடுப்பதால், அதற்கு ஏற்ப விலை இருக்கிறது. இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போனில் லெய்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் கிடைக்கிறது. 120x ஏஐ அல்ட்ரா ஜூம், 30cm மேக்ரோ போட்டோகிராபி கிடைக்கிறது. லெய்கா லைவ் மொமண்ட் (Leica Live Moment), லெய்கா லைவ் போர்ட்ராய்டு மோட் (Leica Live Portrait mode) உள்ளிட்டை பீச்சர்கள் உள்ளன.
சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கொடுக்கப்பட்டு உள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core Dimensity 8500-Ultra 4nm) சிப் மற்றும் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3), ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இந்த சியோமி 17டி மாடலுக்கு கிடைக்கிறது.
லைட் ப்யூசன் 800 ( Light Fusion 800), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது. இதில் 5x ஆப்டிகல் ஜூம், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. லெய்கா சம்மிலக்ஸ் ஆப்டிகல் லென்ஸ் (Leica Summilux Optical Lens) உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
4K ரெக்கார்டிங் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 67W ஹைப்பர் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. 8.17 எம்எம் தடிமன் மற்றும் 200 கிராம் எடை உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
