Home
Mobile

OnePlus நீ காலி மாமே.. 12GB ரேம், Leica கேம், 6500mAh பேட்டரி.. புது Xiaomi T-சீரீஸ் போன்.. ஜூன்10 முதல் SALE!

4 ஆண்டுகள் கழித்து ஷாவ்மீ நிறுவனம் இந்திய சந்தையில் அதன் டி சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட்போன் ஆகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன ஆபர்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்
- 12GB LPDDR5x ரேம்
- லைக்கா-டியூன்டு கேமராக்கள் மற்றும் பிரத்யேக 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி

OnePlus நீ காலி மாமே.. புது Xiaomi T-சீரீஸ் போன்.. ஜூன்10 முதல் SALE!

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை, சலுகைகள்: இந்தியாவில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட HDFC வங்கி, SBI கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி சலுகைக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் தேர்வு செய்யலாம்.

கூடுதலாக, HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.5,000 வரை கேஷ்பேக் பெறலாம். உடனடி வங்கி தள்ளுபடிக்குப் பிறகு, ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB வேரியன்ட்களின் விலைகள் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.59,999 ஆக குறைகின்றன.

இதோடு ஷாவ்மீ நிறுவனம் 18 மாதங்கள் வரை வட்டியில்லா EMI மற்றும் முன்பணம் இல்லாத விருப்பங்களையும் வழங்குகிறது. மேலும், வாங்கிய ஒரு வருடத்திற்குள் 60 சதவீத பைபேக் வேல்யூ உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஷாவ்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸிக் 12GB + 256GB வேரியன்ட்டிற்கு, இந்த பைபேக் திட்டம் ஒரு வருடத்திற்கான பயனுள்ள உரிமையாளர் செலவை ரூ.19,000 ஆக குறைக்கும் என்று ஷாவ்மீ கூறுகிறது.

கடைசியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஸ்பாட்டிஃபை பிரீமியம் ஸ்டாண்டர்ட், மூன்று மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் மற்றும் மூன்று மாதங்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ உள்ளிட்ட இலவச சந்தாக்களும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 10 ஆம் தேதி முதல் ஷாவ்மீ இணையதளம், அமேசான் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஷாவ்மீ ரீடெயில் ஸ்டோர் கள் வழியாக விற்பனைக்கு வரும்.

ஷாவ்மீ 17டி விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ஸ்க்ரீன் ப்ரொடெக்ஷன்
- 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே

- மீடியாடெக் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்செட்
- 12GB LPDDR5x ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ்
- வெப்ப மேலாண்மைக்கான 3D ஐஸ்லூப் கூலிங் சிஸ்டம்
- லைக்கா ஆதரவுடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல் லைட் ஃபியூஷன் 800 ப்ரைமரி கேமரா

- 50-மெகாபிக்சல் லைக்கா 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- பெரிஸ்கோப் கேமரா 115மிமீ க்கு இணையான போக்கல் லெங்த் (Focal ength) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை (OIS) வழங்குகிறது
- 32எம்பி செல்பீ கேமரா

- 5G, 4G LTE, Wi-Fi 7, புளூடூத் 6.0, NFC, GPS, NavIC மற்றும் ஒரு USB டைப்-C போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 67W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 6,500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi 17T Launched in India Sale Starts From June 10 Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X