வாடா என் மச்சி.. மத்த போன்லாம் பஜ்ஜி.. சைலன்ட் ஆக Xiaomi பார்த்த வேலை.. இந்தியாவில் புது T மாடல்!
தற்போது ஷாவ்மீ 17 சீரிஸின் கீழ் 3வது மாடலாக ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் சீரீஸின் கீழ் 3வது மாடல் இருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயமாகும் | Xiaomi 17T Could be third Model in Xiaomi 17 Series Tipped to Launch in India By April 2026
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. 2026 ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்றும் கங்கணம் கட்டிவிட்டது போல தெரிகிறது. கொஞ்சம் ஓவர் பில்டப் ஆக இருந்தாலும் உண்மை அதுதான்!

ஏனென்றால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 17 சீரிஸில் 3வது மாடல் இருக்கும் என்றும், அது இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களும், ஜனவரி 2026 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல்கள் கிடைத்தன.
தற்போது ஷாவ்மீ 17 சீரிஸின் கீழ் 3வது மாடலாக ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் சீரீஸின் கீழ் 3வது மாடல் இருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வெறு பட்ஜெட்களில் வெவ்வேறு அம்சங்களில் கவனம் செலுத்து 3 ஆப்ஷன்கள் இருக்கும்.
இது குட் நியூஸ் என்றால், பேட் நியூஸ் என்னவென்றால் - ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடல்கள் ஜனவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படாது என்கிற தகவலும் கிடைத்துள்ளது. மாறாக இவைகள் மார்ச் 2026 இல் அறிமுகம் செய்யப்படும் என்றும், 3வது மாடல் ஆன ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களும் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டன. 2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ள பல ஸ்மார்ட்போன்களில் இதுவும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சற்றே தள்ளிப்போவது போல் தெரிகிறது.
2026 ஜனவரி என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 10,080mAh பேட்டரியுடன் வரும். ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
அடுத்ததாக ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரியல்மி 16 ப்ரோ சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அடுத்ததாக ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போன் சீனாவில் ஜனவரி 8 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யபப்ட்ட உள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 8 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்ப்ரைஸ் ஆக ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (Oppo Reno 15 Series) இன்று தான் (டிச.31) தைவானில் அறிமுகமானது. இது 2026 ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்த சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 15, ஒப்போ ரெனோ 15 ப்ரோ, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மொத்தம் 3 மாடல்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தைவானில் மினி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படவில்லை, மாறாக ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகையுள்ளது. இவைகளில் எந்தெந்த மாடல்கள் இந்தியாவிற்கு வருகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








