Home
Mobile

சம்பவம் இருக்கு! 6500mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் சியோமி 17டி 5ஜி (Xiaomi 17T 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 17டி 5ஜி அம்சங்கள் (Xiaomi 17T 5G Full Specifications): 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சம்பவம் இருக்கு! இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா(MediaTek Dimensity 8500 Ultra) உடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிபசெட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சம்பவம் இருக்கு! இந்தியாவுக்கு வரும் புது Xiaomi 5ஜி போன்.. எந்த மாடல்

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிகி வரை மெமரி ஆதரவுடன் சியோமி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி 17டி 5ஜி சற்று உயர்வான விலையில் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi 17T 5G specifications leaked ahead of India launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X