Home
Mobile

Xiaomi போட்டான் பாரு.. பிப்.28 அப்புறம்.. 200MP கேமரா.. 6800mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கும் சியோமி 17 (Xiaomi 17) மற்றும் சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன்களின் கலர் வேரியண்ட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவில் கிடைத்த கிரீன் வேரியண்ட், குளோபல் மார்கெட்டில் ஸ்டார்லிட் கிரீன் கலரில் வெளியாக இருக்கிறது. இந்த சியோமி 17 சீரிஸ் மாடல்களின் விவரங்களை பார்க்கலாம்.

சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. இந்தியாவில் அமேசான் தளத்தில் கிடைக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. லெய்கா கேமரா சிஸ்டம் மற்றும் சீன வெர்ஷன்களில் பார்த்த அதே டிசைனிலும் கிடைக்க இருப்பதும் உறுதியாகிவிட்டது.

Xiaomi போட்டான் பாரு.. பிப்.28 அப்புறம்.. 200MP கேமரா.. எந்த மாடல்?

ஆனால், கலர் வேரியண்ட் விவரங்கள் உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இப்போது, வெளியீட்டுக்கு முன்பே உறுதியாகிவிட்டது. சியோமி 17 ஸ்மார்ட்போனில் பிளாக் (Black), ப்ளூ (Black) மற்றும் பிங்க் (Pink) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கிறது. சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஸ்டார்லிட் கிரீன் (Starlit Green) கலரில் கிடைக்க இருக்கிறது.

இது குளோபல் மார்கெட்டில் கிடைக்க இருக்கும் கலர் வேரியண்ட்களாக இருக்கிறது. இந்தியாவில் பிளாக் ஷேடிலும் சியோமி 17 அல்ட்ரா கிடைக்கலாம். 200 எம்பி லெய்கா டெலிபோட்டோ கேமரா கொடுக்க உள்ளது. மெக்கானிக்கல் ஆப்டிகல் ஜூமிங் டெக்னாலஜி கொண்டிருக்கிறது. பிசி லெலவ் புரொடெக்டிவிட்டி இந்த மாடல்களில் வருகிறது.

இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், சீன வேரியண்ட்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்த்தால், குளோபல் மற்றும் இந்திய வேரியண்ட்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். விலையில் மற்றும் சற்று மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே எதிர்பார்க்க முடியும்.

சியோமி 17 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 17 Ultra Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6.9 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது.

3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சியோமி ஷீல்டு கிளாஸ் 3.0 புரொடெக்சன் கிடைத்துள்ளது. 50 எம்பி லெய்கா மெயின் கேமரா + 50 எம்பி லெய்கா அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி லெய்கா சூப்பர் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 30cm டெலிபோட்டோ மேக்ரோ மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது. 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

50 எம்பி செல்பீ கேமராவை இந்த சியோமி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6800mAh பேட்டரி கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுத்து உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. சீன மார்கெட்டில் ரூ.89,455ஆக விலை இருக்கிறது. இந்தியாவில் கூடுதலாக இருக்கும்.

சியோமி 17 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 6.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது. ரூ.55,880 ஆக ஆரம்ப விலை உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Xiaomi 17 Ultra Indian Colours Confirmed Ahead of February 28 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X