வேற போன் வாங்கிடாதீங்க.. Xiaomi-யின் 2 புது சிங்க குட்டிகள்.. ஒரே அடியில் Apple, Samsung ரெண்டும் காலி!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில்.. இந்த சீரீஸின் கீழ் வரும் 2 மாடல்களின் இந்திய விலைகளுமே ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் இந்தியாவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் மறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆரம்பகால லீக்ஸ் மற்றும் டிப்ஸ்டர்களின் கூற்றுகள், ஷாவ்மீ நிறுவனமானது இந்திய சந்தையில் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்யலாம் என்கிற துப்புகளை வழங்க தொடங்கியுள்ளன.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் (@yabhishekhd) லேட்டஸ்ட் எக்ஸ் தள பதிவின்படி, ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 80,000 ஆக இருக்கலாம், ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.1,25,000 ஆக இருக்கலாம். இந்த விலைகள் அவற்றின் "முன்னோடிகளை" விட கணிசமாக அதிகமாகும். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 15 மற்றும் ஷாவ்மீ யா அல்ட்ரா மாடல்கள் முறையே ரூ.64,999 மற்றும் ரூ.1,09,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலே கண்ட விலை நிர்ணய கூற்று உண்மையாக இருந்தால், Xஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் அல்ட்ரா (Samsung Galaxy S Ultra) போன்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ப்ரோ (Apple iPhone Pro) மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 மற்றும் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஆகியவற்றின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ.1,29,999 மற்றும் ரூ.1,34,900 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தன.
இதற்கிடையில், ஐபோன் 17 (iPhone 17) மாடலின் இந்திய விலை (256ஜிபி) ரூ.82,900 இல் தொடங்குகிறது, அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.80,999 க்கு அறிமுகமானது. ஆக ஷாவ்மீ 17 மாடல் ஆனது இவ்விரு மாடல்களுடனும் நேரடியாக போட்டியிடும்.
ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications








