செப்.30 ஆம் தேதி வரைக்கும் புது ஸ்மார்ட்போன் வாங்காதவங்க - புத்திசாலிங்க.. ஏன்னா?
அடச்சே.. இந்த ஸ்மார்ட்போனை மிஸ் பண்ணிட்டோமே என்று செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு நீங்கள் வருத்தப்பட கூடாது என்றால்.. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை எந்த ஸ்மார்ட்போனையும் வாங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். அது - மேஜிக் பேக் ஸ்க்ரீன், 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வரும் ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) மாடல்கள் ஆகும்!
ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 புதிய மாடல்களுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டுடன் அனுப்பப்படும். மேலும் இந்த 3 போன்களிலுமே லைக்கா பிராண்டட் ரியர் கேமராக்கள் (Leica branded rear cameras) இடம்பெறலாம்.
குறிப்பாக ப்ரோ மாடல்களில் மேஜிக் பேக் ஸ்க்ரீன் (Magic Back Screen) பேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு செகண்டரி டிஸ்பிளேவாக செயல்படுகிறது மற்றும் ரியர் கேமரா யூனிட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கால் நோட்டிஃபிக்கேஷன்களை காட்டுகிறது, ம்யூசிக் கண்ட்ரோல்களை செய்ய அனுமதிக்கிறது மற்றும் ஸ்டாப்வாட்ச் போன்ற விட்ஜெட்களையும் இயக்குகிறது.
மேலும் ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 17 ப்ரோ மாடலில் எதிர்பார்க்க்கப்படும் மற்ற அம்சங்கள்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.1மிமீ ல்ட்ரா-தின் பெசல்களுடன் 6.3-இன்ச் LTPO டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,300mAh பேட்டரி
- ஐபி69 ரேட்டிங்
ஷாவ்மீ 17 மாடலில் எதிர்பார்க்க்கப்படும் மற்ற அம்சங்கள்?
- 6.3-இன்ச் 1.5கே LTPO OLED டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராயூனிட்
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்
ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவிற்கு வரும் போது (ஸ்மார்ட்ப்ரைஸ் வழியாக கிடைத்த தகவல்களின்படி) ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.80,000 க்குள், அதாவது ரூ.79,990 க்குள் இருக்கலாம். இதேபோல ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1 லட்சம் ஆக, அதாவது ரூ.99,990 ஆக இருக்கலாம்!
நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே சீரிஸின் கீழ் அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இம்முறை அல்ட்ரா மாடலுக்கு பதிலாக ப்ரோ மேக்ஸ் மாடல் வரும் என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








