சிக்குன்னு ஒரு சிறுத்தைக்குட்டி.. புது Xiaomi போன்.. 16GB ரேம், 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், Leica கேமரா!
சீன மொபைல் பிராண்ட் ஆன ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது - மொத்தம் நான்கு 50எம்பி கேமராக்கள் (ரியர் மற்றும் செல்பீ), 16ஜிபி ரேம், 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்ட - ஒரு முரட்டு ஸ்மாட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஷாவ்மீ 17 (Xiaomi 17) மாடல் ஆகும். ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது சிங்கப்பூரின் ஐஎம்டிஏ (IMDA) சான்றிதழ் தளத்தில் 25113PN0EG என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ளது. இது ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது என்பதை குறிக்கிறது.

ஷாவ்மீ 17 இந்திய விலை நிர்ணயம்: இந்தியாவில் இது ரூ.56,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஆகிய மாடல்களுக்கு போட்டியை வழங்கும் விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சீனாவில் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகமாகி உள்ளது. மேலும் இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 16 ஜிபி ரேம் + 512GB ஆப்ஷன் முறையே (தோராயமாக) ரூ. 60,000 மற்றும் ரூ.62,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் 1.5கே (2656 x 1220 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 300ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 19.6:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- DCI-P3 கலர் கேமட்
- HDR 10+, HDR விவிட் மற்றும் டால்பி விஷன் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்3
- ஷாவ்மீ ஏஐ டூல்களின் தொகுப்பான ஹைப்பர்ஏஐ (HyperAI(
- 3என்எம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X RAM மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- லைக்காவால் (Leica) ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.67 மற்றும் 23மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) டெலிஃபோட்டோ லென்ஸ்
- 102-டிகிரி எப்ஓவி உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.4) அல்ட்ராவைட்-ஆங்கிள் சென்சார்
- எப்/2.2 மற்றும் 90-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ரியர் கேமராக்கள் 30fps இல் 8K வீடியோக்களையும், 60fps வரை 4K வீடியோக்களையும் பதிவு செய்யும் திறன் கொண்டவை.
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- டூயல்-பேண்ட் வைஃபை 7
- ப்ளூடூத் 5.4 ஆதரவு
- யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங் (இது அதன் முன்னோடியை விட 10 மடங்கு அதிக எதிர்ப்பு திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது)
- அளவீட்டில் 151.1x71.8x8.06மிமீ
- எடையில் சுமார் 191 கிராம்


Click it and Unblock the Notifications








