அறிமுகமானது புது சியோமி 5ஜி போன்.. 6330mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 17 (Xiaomi 17) ஸ்மார்ட்போனை இப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பார்சிலோனாவில் நடைபெறும் MWC 2026 நிகழ்வில் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி 17 அம்சங்கள் (Xiaomi 17 Specifications): இந்த போன் 6.3-இன்ச் 1கே எம்10 12-பிட் ஒஎல்இடி (1.5K M10 12-bit OLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 1920Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், சியோமி ஷீல்ட் கிளாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் இந்த சியோமி 17 போன் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது.
அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சியோமி 17 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போன் குவால்காம் AI எஞ்சின், ஹைப்பர் AI டூல் ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
Leica கேமரா செட்டப் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதன்படி OIS ஆதரவு கொண்ட 50எம்பி லைட் ஃப்யூஷன் 950 சென்சார் + 50எம்பி Leica அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி Infinity Leica டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் 8கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு கொண்டுள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய சியோமி போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த சியோமி போனில் உள்ளன.
குறிப்பாக அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
அதுவும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது சியோமி 17 போன். 5ஜி, டூயல் 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17 ஸ்மார்ட்போனில் உள்ளன.

6330mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சியோமி 17 ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னடிக் சார்ஜிங், 22.5W வயர்டு மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஐஸ் ப்ளூ, வென்ச்சர் கிரீன், பிளாக் நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 17 போனின் விலை 999 Euros (இந்திய மதிப்பில் ரூ.1,07,385)-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை1099 Euros (இந்திய மதிப்பில் ரூ1,18135)-ஆக உள்ளது. தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications