Home
Mobile

Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. முரட்டு காம்போ.. 200MP Leica கேமரா உடன் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்!

ஷாவ்மீ ரசிகர்களுக்கு 2 குட் நியூஸ் - இரண்டுமே ஒரே ஸ்மார்ட்போனை பற்றியது தான். முதலாவதாக - 2026 தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாவ்மீயின் புதிய அல்ட்ரா மாடல், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அதாவது இந்த டிசம்பர் மாதமே (December 2025) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போனாகும். இரண்டாவது குட் நியூஸ் - அறிமுகத்திற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. அதன் மூலம் இந்த ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கேமரா, பெர்பார்மென்ஸ் என நல்ல-நல்ல அம்சங்களின் காம்பினேஷனில் வரும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

முரட்டு காம்போ.. 200MP Leica கேமரா உடன் Snapdragon 8 Elite Gen 5 சிப்!

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் 3என்எம் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 Chipset)
- ரியர் கேமரா செட்டப்பில் குரோமடிக் பிறழ்ச்சியை (Chromatic aberration) நீக்கும் என்று கூறப்படும் "புத்தம்-புத்தம் லைக்கா பினிஷ்" (All New Leica Finish) கொண்டிருக்கலாம்

- குரோமடிக் பிறழ்ச்சியை நீக்குவதன் மூலம் கேமரா சென்சார்கள் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வண்ணங்களையும் ஒரே மையப்புள்ளிக்கு கொண்டு வரத்தவறிவிடலாம்; அதே நேரத்தில் படத்தில் உள்ள பொருட்களை வண்ண எல்லைகளுடன் தோன்றும்படி கைப்பற்றலாம்
- இதோடு புதியலைக்கா பினிஷ் ஆனது கேமரா பிரதிபலிப்புகளை (camera reflections) குறைக்க உதவுவதாகவும், அதே நேரத்தில் "உயர் வரையறை மற்றும் நம்பகத்தன்மையை" (high definition and fidelity) வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

- ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான போட்டோகிராபி கிட்டும் (Photography Kit) அப்கிரேட் செய்யப்படலாம்
- முக்கியமாக ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் நாம் பார்த்ததை போலல்லாமல், ரியர் கேமரா செட்டப்பில் இது குவாட் கேமராவிற்கு பதிளாக ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்யலாம்.

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OVX10500U சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, S5KHPE சென்சார் கொண்ட 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் OV50M அல்லது S5KJN5 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம்.

"பழைய" ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா

- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra With New Leica Coating Camera Snapdragon 8 Elite Gen 5 Launch in December Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X